$550.8 மில்லியன் கொண்டோமினிய கட்டடம்

$550.8 மில்லியன் கொண்டோமினிய கட்டடம்

1 mins read
b549c174-b265-4079-af25-f940bee0e8cf
ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விற்கப்படும் 'வாட்டன் எஸ்டேட்' கொண்டோமினிய கட்டடம். படம்: கூகல்மேப்ஸ் -

ஒட்­டு­மொத்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் 'வாட்­டன் எஸ்­டேட்' கொண்­டோ­மி­னிய கட்­ட­டத்தை வாங்­கு­வ­தற்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­களைப் பெறும் உரி­மையை 'யூஓ­எல்' குழு­மம், 'சிங்­டேண்ட்' குழு­மம் ஆகி­யவை பெற்­றுள்­ளன. இக்­கட்­ட­டத்­தைச் சேர்ந்து வாங்க இரு அமைப்­பு­களும் எண்­ணம் கொண்­டுள்­ளன. திட்­ட­மிட்­ட­படி பரி­வர்த்­தனை இடம்­பெற்­றால் ஒட்­டு­மொத்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் இதுவே ஆக அதிக விலைக்கு விற்­கப்­பட்ட குடி­யி­ருப்­புக் கட்­ட­ட­மாக விளங்­கும்.

எனி­னும், 'வாட்­டன் எஸ்­டேட்' கொண்­டோ­மி­னி­யத்­திற்கு கிடைக்­க­வுள்ள இந்­தப் பெருமை அதிக நாட்­கள் நீடிக்­கா­ம­லும் போக­லாம். ஒட்­டு­மொத்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டம் இவ்­வாண்டு சூடு­பி­டித்த வண்­ணம் உள்­ளது. மேலும், லோரோ சுவா­னில் உள்ள 'சுவான் பார்க்' கொண்­டோ­மி­னிய கட்­ட­டத்­தின் உரி­மை­யா­ளர்­கள் அதை விற்க 938 மில்­லி­யன் வெள்­ளி­யைக் கேட்­கின்­றனர்.

அதற்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­களைப் பெற அடுத்த மாதம் 18ஆம் தேதிக்­குள் சமர்ப்­பிக்­க­வேண்­டும்.

'வாட்­டன் எஸ்­டேட்' கட்­ட­டத்­தின் விலை குறைந்­த­பட்­சம் 500 மில்­லி­யன் வெள்ளி என்று அதன் உரி­மை­யா­ளர்­கள் சென்ற மாதம் நிர்­ண­யித்­த­னர். இப்­போது இதன் விலை அதை­விட சுமார் 10 விழுக்­காடு அதி­கம். நன்­யாங் தொடக்­கப் பள்ளி, ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி ஆகி­ய­வற்­றுக்கு ஒரு கிலோ­மீட்­ட­ருக்­கும் குறை­வான தூரத்­தில் அமைந்­துள்­ளது 'வாட்­டன் எஸ்­டேட்'. 'கொரோ­னே­ஷன்' கடைத்­தொ­குதி, 'டான் கா கீ' பெரு­வி­ரைவு ரயில் நிலை­யம் ஆகி­ய­வற்­றுக்கு மிக அருகே இருக்­கும் 'வாட்டன் ரைஸ்' பகு­தி­யில் அமைந்­துள்­ளது. 1983ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட இதில் இப்­போது 104 வீடு­கள் உள்­ளன.