முன்னாள் அதிபர் ஓங் டெங் சியோங்கின் மகன்கள் தங்களுக்கு இைடயிலான குடும்ப வர்த்தகப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் உருவாக்கிய ஓங் அண்ட் ஓங் நிறுவனத்தில் தமக்கு இருந்த 28.45 விழுக்காடு பங்கை குறைவான விலையில் வாங்கி விட்டார்கள் என்று மூத்த மகன் ஓங் சே குவான் தமது தம்பி ஓங் சே பூன் மற்றும் ஆறு பங்குதாரர்கள் மீது வழக்குத் தொடுத்தார். $5.4 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை $1.65 மில்லியனுக்கு பங்குதாரர் களுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு 70.43% பங்குகளை வைத்திருந்த அவரது தம்பி சே பூனும் மற்ற பங்கு தாரர்களும் நிறுவன விதிமுறைப்படி தாங்கள் நடந்துள்ளதாகக் கூறினர். மேலும் அண்ணண் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்தார் தம்பி. இந்நிலையில் பிரச்சினை சுமூகமாக தீர்த்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் தெரியவில்லை.
ஓங் டெங் சியோங் மகன்கள் பிரச்சினை தீர்ந்தது
1 mins read
-


