மூன்று நாடுகளில் 'என்டியுசி இன்கம்' காப்புறுதி சேவை

மூன்று நாடுகளில் 'என்டியுசி இன்கம்' காப்புறுதி சேவை

2 mins read
7d686478-85bf-4241-bd45-72480e6901ad
-

சிங்­கப்­பூ­ரின் பிர­பல காப்­பு­றுதி நிறு­வ­னங்­களில் ஒன்­றான 'என்­டி­யுசி இன்­கம்' அதன் சேவை­யை மூன்று நாடு­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­து ­கிறது.

இந்­தோ­னீ­சியா, வியட்னாம், மலே­சியா ஆகிய நாடு­களில் அது அடி­யெ­டுத்து வைக்­கிறது.

இதற்­காக அந்­நா­டு­களில் உள்ள முன்­னணி நிறு­வ­னங்­க­ளு­டன் என்­டி­யுசி இன்­கம் கைகோத்­து உள்­ளது.

மூன்று நாடு­க­ளி­லும் காப்­பு­று­தியை ஒரு சேவை­யாக வழங்­கு­வதே 'என்­டி­யுசி இன்­கம்'மின் நோக்­க­மா­கும்.

அதா­வது தேவையை அடிப்படை­ யாகக் கொண்டு வாடிக்­கை­யா­ளர் ­க­ளுக்கு எளிய வழி­யில் காப்­பு­றுதி சேவை வழங்­கப்­படும்.

இந்­தோ­னீ­சி­யா­வின் பிடி சென்ட்­ரல் ஏஷியா ஃபைனான்­­ஷி­யல் (ஜகா­திரி), வியட்­னா­மின் 'பிடிஐ' எனப்­படும் போஸ்ட் அண்ட் டெலி­கம்­யூ­னி­கே­ஷன் ஜாய்ண்ட் ஸ்டாக் காப்­பு­றுதி நிறு­வ­னம், மலே­சி­யா­வின் விஷுர் டெக் ஆகிய நிறு­வ­னங் ­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வோம் என்று நேற்று என்­டி­யுசி இன்­கம் தெரி­வித்­தது.

இம்­மூன்று நிறு­வ­னங்­களும் என்­டி­யுசி இன்­க­மின் 'டிராப்­லெட்' எனும் மழைக்­கால காப்­பீட்­டுத் திட்­டத்தை ஜகார்த்தா, ஹனோய், ஹோ சி மின், கோலா­லம்­பூர் உள்­ளிட்ட நகரங்­களில் அறிமுகப்படுத்தும்.

வாட­கை கார் சேவை­ வழங்­கும் 'கிராப்' போன்ற தளங்­ க­ளைப் பயன்­ப­டுத்­தும் வாடிக்­கை­யா­ளர்­களை இலக்­கா­கக் கொண்டு இந்­தக் காப்­பு­றுதி திட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது மழைக்­கா­லத்­தில் கட்­ட­ணம் அதி­க­ரிக்­கும்­போது காப்புறுதி ஈடு செய்யும்.

ஜெர்­ம­னி­யின் தரவு நிறு­வ­ன­மான 'ஸ்டா­டிஸ்டா' மேற்­கொண்ட ஆய்வு ஒன்றை சுட்­டிக்­காட்­டிய என்­டி­யுசி இன்­கம், 2020ல் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் வாட­கைக் கார்­ பய­னீட்­டா­ளர்­களின் சந்­தை மதிப்பு 11 பில்­லி­யன் யுஎஸ் டாலர் (14.82 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி) என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தது.

இதில் இந்தோனீசியா மட்டும் 6.73 பில்லியன் வெள்ளியுடன் முன்னணி வகிக்கிறது.

இதற்கு அடுத்தடுத்த நிலையில் சிங்கப்பூர் (S$2.69 பில்லியன்), வியட்னாம் (S$2.16 பில்லியன்), மலேசியா (S$1.48 பில்லியன்) ஆகிய நாடுகள் ஜெர்மனியின் ஆய்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.