குடிபோதையில் முன்னாள் மனைவியை அறைந்தார்

குடிபோதையில் முன்னாள் மனைவியை அறைந்தார்

2 mins read
7d00fea4-1b2a-4749-af38-08ab453f1b68
-

குடி­போ­தை­யில் முன்­னாள் மனை­வியை அறைந்­த­வ­ருக்கு நேற்று சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆம்­பு­லன்ஸ் ஊழி­ய­ரான அபு பக்­கர் அப்­துல் கரீம், 57, குடி­போ­தை­யில் உண­வங்­காடி நிலை­யத்­தி­லும் தக­ராறு செய்­துள்­ளார்.

பொது இடத்­தில் மது அருந்­தி­யது உட்­பட தம் மீது சுமத்­தப்­பட்ட எட்டுக் குற்­றச்­சாட்­டு­களை அபு பக்­கர் கரீம் நேற்று நீதி மன்றத்­தில் ஒப்­புக் கொண்­டார்.

அவ­ருக்கு 12 வாரச் சிறை தண்­ட­னை­யும் 3,500 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

குடி­போ­தை­யில் பொதுப் பேருந்­துக்கு சேதம் ஏற்­ப­டுத்­தி­ய­தற்­கும் போலிஸ் கார் மீது ஏறி படம் பிடித்­த­தற்­கும் சேர்த்து அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது நீதி­மன்­றத்­தில் பேசிய அர­சாங்க வழக்­க­றி­ஞர் பிரை­யோண்ட் சின், பிணை­யில் உள்ள அபு, ஏப்­ரல் 6ஆம் தேதி வீட்­டில் குடித்த பிறகு மனை­வியை புளோக்­கின் கீழே உள்ள காலி­யி­டத்­துக்கு பேச வரு­மாறு அழைத்­த­தாக தெரி­வித்த தார். அவர் ஏன் பிணை­யில் இருக்­கி­றார் என்­பது குறித்து தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அவ­ரது முன்­னாள் மனை­வி­யும் சகோ­த­ரி­யு­டன் அங்கு வந்­துள்­ளார். அப்­போது மக­னைப் பார்க்க நீ வரு­வ­தில்லை என்று கூறி அவர் சண்­டை­யிட்­டுள்­ளார். இதில் வாக்­கு­வா­தம் ஏற்­பட்டு மனை­வியை அவர் அறைந்­துள்­ளார். அவ­ரது முன்­னாள் மனைவி ஏற்­கெ­னவே தனி­ந­பர் பாது­காப்பு உத்­த­ர­வைப் ெபற்­றி­ருந்­தார். ஆனால் அதை அபு பக்கர் பொருட்­படுத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை. இத­னால் மனை­வி­யின் சகோ­தரி போலி­சா­ருக்­குத் தக­வல் தெரி­வித்­தார்.

மறு­நாளே மாலை ஆறு மணி அள­வில் வேலையை முடித்த பிறகு கரீம், சர்க்கிட் ரோட்­டில் உள்ள உண­வங்­காடி நிலை­யத்­துக்­குச் சென்று 'வோட்கா' குடித்­துள்­ளார்.

பின்­னர் அங்கு இருந்த ஊழி­ய­ரு­டன் அவர் தக­ராறு செய்­துள்­ளார். இத­னால் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்ட போலி­சார் அவரை கைது செய்­த­னர்.

கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­திலும் அவர் தகராறு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தி­ல் குடித்­து­விட்டு போலிஸ் கார் மீது ஏறி புகைப்படம் எடுத்தார்.

இவை அனைத்தையும் அவருக்குத் தண்டனை விதிக்கும்போது நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.