பெரியவர்களுக்கான பராமரிப்பு இல்லத்தில் ஆட்டிசம், அறிவாற்றல் குறைபாடு, வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், அங்கு இருந்த ஊழியரின் சட்டையைப் பிடித்து இழுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த 28 வயது ஊழியர், அவரை இரண்டு முறை தாக்கியதோடு தரையில் இழுத்துச் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நடந்த சம்பவத்தில் இந்திய நாட்டவரான அந்த ஊழியருக்கு நேற்று ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கி பேசிய மாவட்ட நீதிபதி ஜான் இங், இத்தகைய வேலையில் சிரமங்கள் இருப்பதை உணர்ந்திருப்பதாகக் கூறினார்.
வொர்க் பர்மிட்டில் வேலை செய்த ஊழியரை நோக்கி பேசிய நீதிபதி, "உங்களைப் போன்றவர் களின் வேலை எளிதல்ல. இருந்தாலும் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாது," என்றார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் தெரியக்கூடாது என்பதால் ஊழியரின் பெயரையும் அவர் பணியாற்றிய இல்லத்தின் பெயரையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.
பராமரிப்பு ஊழியர், இல்ல வாசியை 2019ஆம் ஆண்டில் இருந்து பராமரித்து வந்துள் ளார்.

