ரோம்: இத்தாலியத் தலைநகர் ரோமில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், சுகாதார அமைச்சர் பங்கேற்கும் உச்சநிலை மாநாடு இன்று 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, சிங்கப்பூர்-இந்தியா இடையிலான வலுவான உறவுகளை மறுஉறுதிப்படுத்திய அமைச்சர்கள், இருநாடுகளும் மேலும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.