சிங்கப்பூரில் பிறந்த காற்பந்து ஆட்டக்காரர் ஹேரி பெர்ட்விசல், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் உல்வர்ஹேம்டன் வன்டரர்ஸ் (உல்வல்ஸ்) குழுவுக்கு விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருக்கும் 17 வயது திரு பெர்ட்விசல் தேசிய சேவை ஆற்றாமல் வெளிநாடு செல்லத் தேவையான அனுமதியைப் பெறாமல் இங்கிலாந்தில் இருப்பதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
அவரது சிங்கப்பூர் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி அவரது பெற்றோர் விண்ணப்பம் செய்ததாக அமைச்சு கூறியது.
ஆனால், அந்த விண்ணப்பத்தை அமைச்சு ஏற்க மறுத்துவிட்டது.
தேசிய சேவையைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூர் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்த அமைச்சு, ராணுவ ஆட்சேர்ப்புச் சட்டத்தின்கீழ் பெர்ட்விசல் குற்றம் புரிந்துள்ளதாக கூறியது.