நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் அமைச்சர்நிலை அறிக்கை

நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் அமைச்சர்நிலை அறிக்கை

1 mins read
44b2630b-b28d-4c40-89c5-aba171c2caeb
-

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் மருத்­து­வ­மனை ஊழி­யர் கொள்­ள­ளவு வரும் திங்­கட்­கி­ழமை கூடும் அடுத்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் முக்­கிய அம்­ச­மா­கத் திக­ழும்.

இது பற்றி குறைந்­தது பத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வர். அன்­றாட தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து 3,000ஐ கடந்து வரும் வேளை­யி­ல் கடந்த புதன்­கி­ழமை தொற்று எண்­ணிக்கை 5,324ஐ எட்­டி­ய­து அனை­வ­ரது கவ­னத்தையும் ஈர்த்­துள்­ளது.

சுகா­தார அமைச்­சின் சார்­பில் ஓர் அமைச்­சர்­நிலை அறிக்கை திங்­கட்­கி­ழ­மை­யன்று தாக்­கல் செய்­யப்­படும்.

அன்­றாட தொற்று எண்­ணிக்கை கடந்த புதன்­கி­ழமை 5,000ஐ தாண்­டி­யது குறித்து அன்­றைய தினம் கருத்­து­ரைத்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், "பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்ள தொற்று எண்­ணிக்கை பொது மருத்­து­வ­ம­னை­களில் குறிப்­பி­டத்­தக்க அழுத்­தத்­தைக் கொடுத்­துள்­ளது.

"1,650 தனி­மைப்­ப­டுத்­தும் படுக்­கை­களில் 89 விழுக்­கா­டும் தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­களில் 67 விழுக்­கா­டும் நிரப்­பப்­பட்டு விட்­டன," என்­றார்.

தற்­போது கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு 200 தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­கள்­தான் உள்­ளன. அவர்­கள் சரா­சரி­யாக 15 நாட்­கள் அப்­பி­ரி­வில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். ஆக அதி­க­மாக அவர்­கள் ஒரு மாதம் அங்­கி­ருக்­கின்­ற­னர் என்­றார் அமைச்­சர்.

இயோ சூ காங் தொகுதி உறுப்­பி­னர் யிப் ஹோன் வெங், மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை, ஊழி­யர்­க­ளின் நல்­வாழ்வு ஆகி­யவை பற்றி கேட்­பார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்­பி­னர் ஜெசிக்கா டான், கொவிட்-19 தொடர்­பி­லான கடு­மை­யான நோயா­ளி­கள் மற்­றும் மர­ணங்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­கும் வழி­கள் பற்றி கேள்வி எழுப்­பு­வார்.