சமய, இனக் குழுக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்ற சுபாஷ்
உள்ளூர் இசைக் கலைஞரான 29 வயது திரு சுபாஷ் நாயர் (படம்), வெவ்வேறு சமய மற்றும் இனக் குழுக்களுக் கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்ற நான்கு குற்றச் சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவர் மீது வரும் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இனம் சார்ந்த உணர்வுகளைத் தூண்டும் வகையில் காணொளி வெளியிட்டதற்காக அவருக்கு 24 மாதக்கால நிபந்தனை யுடன் கூடிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய குற்றச் சாட்டுகளின் மூலம் திரு நாயர் அந்த எச்சரிக் கையையும் மீறியிருக்கிறார் என்று நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று, திரு நாயர், சீன கிறிஸ்தவர்கள் மற்ற சமூகம் பற்றி கூறிய வெறுக்கத் தக்க கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டார். இப்படிப் பட்ட வெறுக்கத்தக்க கருத்துகளை மலாய் முஸ்லிம்கள் வெளியிட்டிருந்தால், அவர்கள் வேறு விதமாக நடத்தப்பட்டி ருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்ததாக போலிசார் கூறினர்.
மேலும், திரு நாயர் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயும் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி கருத்து கூறியிருந்தார். 2019 ஜூலை 2ஆம் தேதி நிகழ்ந்த ஆர்ச்சர்ட் டவர்ஸ் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றஞ்சாட்ட சீன ஆடவரை சம்பந்தப்பட்ட அமைப்புகள் கடுமையற்ற முறையில் கையாண்டதாகவும் அவர் அவதூறு கூறியிருந்தார்.
வெவ்வேறு சமய மற்றும் இனக் குழுக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் நிரூபிக் கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
நண்பரைக் கத்தியால் குத்தியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
தனக்கு நிதி உதவி செய்து வந்த நண்பர் தங்கள் நட்பை முறித்துக்கொள்ள முடிவெடுத்திருப்பது குறித்து அவரிடம் தெரிவித்தவுடன், தன்னை விட வயதில் மூத்தவரான அந்த நண்பரை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் கத்தியால் தாக்கப்பட்ட அந்த 44 வயது ஆடவருக்கு எச்ஐவி நோய் இருப்பது தெரியவந்ததும் அவருடன் நெருங்கி பழக இப்போது 29 வயதாகும் குற்ற வாளி மறுத்துவிட்டார். அதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் வலுத்தது. அதன் விளைவாக ஆத்திரத்தில் இளை யவர் மூத்த ஆடவரைக் கத்தியால் குத்தினார். கடும் காயமுற்ற அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து மருத்துவமனை யிலிருந்து வெளியேறிய மூத்த ஆடவருக்கு 27 நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் காணொளி வழியாகத் தோன்றிய சிங்கப்பூரரான அந்தக் குற்றவாளி, தாக்குதல் நடத்தியது, போதைப் பொருள் குற்றங்கள் என பத்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு, குற்றவாளியின் பெயரை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு டிசம்பர் 16ஆம் தேதி தண்டனை விதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீன் பண்ணை ஊழியர் நீரில் மூழ்கி மரணம்
மீன் பண்ணை ஊழியர் ஒருவரின் சடலம் லிம் சூ காங் நீர்ப்பகுதி யில் நேற்று முன்தினம் காலையில் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் புதன்கிழமையன்று காணாமல் போயிருந் தார். மாண்ட அந்த 50 வயது ஆடவர் மியன் மார் நாட்டவர் என்று அறியப்படுகிறது. நீரில் விழுந்த அவரைக் காணவில்லை என்று போலிசுக்கு புதன்கிழமை பிற்பகல் 12.35 மணிக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் அவரது உடல் நேற்று முன்தினம் காலை 7.25 மணிக்கு நீரிலிருந்து மீட்கப்பட்டது. அவரது மரணத்தில் சூது இல்லை என்று தனது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்த போலிசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

