எதிர்காலத்தில் முதன்மை வட்டாரங்களில் கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்கு வோருக்கான விதிமுறைகள்
கடுமையாக்கப்பட்டுள்ளதால் அது மறுவிற்பனை விலை ஏற்றத்தைத் தணிக்க உதவும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அங்கு வசித்த பிறகே அந்த வீடுகளை விற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவோர் அவற்றை விற்கும்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் மானியத்தைக் கழகம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
இந்த அணுகுமுறை முதல்
முறையாக நடைமுறைப்படுத்தப்
படுகிறது. ஆனால் வீடுகளை விற்கும்போது கூடுதல் மானியத்தைத் திருப்பித் தர வேண்டியிருப்பதால் அதை ஈடுசெய்ய வீடுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் அபாயம் இருப்பதாக சிலர்
கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் லீ விளக்கம் அளித்தார்.
"வீட்டு விலையில் ஏற்ற இறக்கத்தை முன்னுரைப்பது சவால்மிக்கது. வீடுகளை என்ன விலைக்கு வாங்கலாம் என வீடுகளை வாங்குவோர் முடிவெடுப்பது போன்ற காரணிகளைப் பொறுத்து விலைகள் நிர்ணயிக்கப்படும்."
என்றார் திரு லீ.
புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து பலதரப்பினரிட
மிருந்து பல்வேறு கருத்துகள் குவிந்திருப்பதாக இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் பொருளியல் கொள்கைக் கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் லீ கூறினார்,
புதிய முதன்மை வட்டார பொது வீடமைப்பு முன்னோடித் திட்டத்தின்கீழ் (பிஎல்எச்) வீடு வாங்க தகுதி பெறும் நிபந்தனைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வீடுகளை வாங்குவோரின் அதிகபட்ச சம்பளம் $14,000ஆக இருக்க வேண்டும்.
தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கும் இதே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாதோர் வாங்க
முடியாது
இதற்கிடையே, முதன்மை வட்டாரங்களில் கட்டப்படும் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைத் திருமணமாகாதவர்கள் வாங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நடைமுறைப்
படுத்தப்படும் இந்த அணுகு
முறையை இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை என்றும் தொடக்கத்தில் சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு விடப்படும் என்றும் அமைச்சர் லீ தெரிவித்தார்.
"தற்போது, பெரிய குடும்பங்
களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவற்றுக்குக் கூடுதல் இடம் தேவைப்படும்," என்றார் அமைச்சர்.