தூய எரிசக்தி நிறுவனங்கள் வழங்கும் உபகாரச் சம்பளம்

தூய எரிசக்தி நிறுவனங்கள் வழங்கும் உபகாரச் சம்பளம்

1 mins read
d7a0fa12-17b4-48ad-8328-c80551bc842a
-

அடுத்த ஆண்­டி­லி­ருந்து பொறி­யி­யல் மாண­வர்­க­ளுக்கு எரி­சக்தி துறை உப­கா­ரச்­ சம்­ப­ளத்தை தூய எரி­சக்தி நிறு­வ­னங்­கள் வழங்­கும். இந்த உப­கா­ரச்­ சம்­ப­ளத்தை இந்­நி­று­வ­னங்­கள் வழங்­கு­வது இதுவே முதல்­முறை.

உப­கா­ரச் ­சம்­ப­ளம் பெறும் மாண­வர்­க­ள் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அல்­லது தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் தங்­கள் கல்வி யை முடித்­ததும் தூய எரி­சக்தி நிறு­வ­னங்­களில் வேலை­யில் அமர்த்­தப்­ப­டு­வர்.

எரி­சக்தி துறை உப­கா­ரச்­

சம்­ப­ளம் 2014ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு சிங்­கப்­பூர் பவர், சினோகோ எனர்ஜி, எரி­சக்தி சந்தை ஆணை­யம் ஆகி­ய­வையும் நிதி வழங்­கி­யுள்­ளன.

இந்த உப­கா­ரச்­ சம்­ப­ளத் திட்­டத்­தில் தூய எரி­சக்தி நிறு­வ­னங்­களும் இணைந்­து­கொள்­வ­தால் அத்­து­றை­யில் போது­மான

மனி­த­வ­ளம் இருப்­பது உறு­தி­செய்­யப்­படும்.

அது­மட்­டு­மல்­லாது, தூய எரி­சக்தி முறைக்கு மாற சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் இலக்கை அடை­யத் தேவை­யான ஆற்­றல்­மிக்க ஊழி­ய­ர­ணியை உரு­வாக்க பாதை வகுக்­கப்­படும்.

"புதிய அணு­கு­முறை வாய்ப்­பு ­களை அதி­க­ரிக்­கும். தூய எரி­சக்தி துறை­யில் சேர்ந்து சிறப்­பா­கச் செயல்­ப­டத் தயா­ராக இருக்­கும் ஆற்­றல்­மிக்க ஊழி­ய­ரணி கிடைக்­கும்," என்று

வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வாரத்­தின் இளை­யர்­க­ளுக்­கான நிகழ்ச்சி ஒன்­றில் அவர் பேசி­ய­போது இத்­த­க­வல்­களை வெளி­யிட்­டார்.

குறைந்த கரிம வளங்­க­ளி­

லி­ருந்து ஏறத்­தாழ 30 விழுக்­காடு மின்­சா­ரத்தை இறக்­கு­மதி செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக சிங்­கப்­பூர் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.