சிங்கப்பூர் குடியுரிமை ரத்து கோரும் விண்ணப்பம் நிராகரிப்பு

சிங்கப்பூர் குடியுரிமை ரத்து கோரும் விண்ணப்பம் நிராகரிப்பு

1 mins read
69c4029c-bc69-4ff0-ad99-3081903eae3e
13 வயது வரை சிங்கப்பூரில் இருந்த பிறகு, இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் கனவுடன் இங்கிலாந்து சென்ற திரு ஹேரி பெர்ட்விசல். படம்: திரு ஹேரி பெர்ட்விசல் இன்ஸ்டகிராம் -

சிங்கப்பூரில் பிறந்த காற்பந்து ஆட்டக்காரர் ஹேரி பெர்ட்விசல் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் உல்வர்ஹேம்டன் வன்டரஸ் (உல்வ்ஸ்) குழுவுக்கு விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருக்கும்

17 வயது திரு பெர்ட்விசல் தேசிய சேவை ஆற்றாமல் வெளிநாடு செல்லத் தேவையான அனுமதியைப் பெறாமல் இங்கிலாந்தில் இருப்பதாகத் தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது.

அவரது சிங்கப்பூர் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி அவரது பெற்றோர் விண்ணப்பம் செய்ததாக அமைச்சு கூறியது.

ஆனால் அந்த விண்ணப்பத்தை அமைச்சு ஏற்க மறுத்துவிட்டது.

தேசிய சேவையைத் தவிர்க்க சிங்கப்பூர் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்த அமைச்சு, ராணுவ ஆள்சேர்ப்பு சட்டத்தின்கீழ் திரு பெர்ட்விசல் குற்றம் புரிந்துள்ளதாக கூறியது.