வருமானம் அதிகரிக்கும் எனப் பெரும்பாலான உள்ளூர் நிறு
வனங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை உற்பத்தித்
துறைக்கு அவ்வளவாக இல்லை.
வருமானம் அதிகரிக்கும் என்று உற்பத்தித் துறை நிறு
வனங்களில் 20 விழுக்காடு நிறு
வனங்கள் இவ்வாண்டின் நடுப்
பகுதியில் நம்பிக்கை தெரிவித்தன.
ஆனால் இந்த விகிதம் தற்போது 16 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, வருமானம் ஏற்றம் காணும் என சேவைத்துறை நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.
வருமானம் உயரும் என்று இவ்வாண்டின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 11 விழுக்காடு சேவைத் துறை நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
இந்த விகிதம் தற்போது 19 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.