கட்டுப்படியாகக்கூடிய விலையில் எல்லாருக்கும் வீடுகள் இலக்கு

முரசொலி

சிங்­கப்­பூர் இயற்கை வளங்­கள் இல்­லாத சிறிய நாடு. பர­ப்ப­ள­வில் சிறிய நாடாக இருந்­தா­லும் நாட்டில் மக்­க­ளுக்கு உரிமை-உடைமை இருக்­க­வேண்­டும் என்ற நோக்­க­த்துடன் அது தன் மக்­கள் அனை­வ­ருக்­கும் கட்­டுப்­பாடிகக்கூடிய வகை­யில் சொந்த வீடு­களை மானி­யத்­து­டன் உரு­வாக்­கித் தந்து உலகச் சாத­னை­யைப் படைத்து உள்­ளது.

சிங்­கப்­பூரர்­க­ளி­ன் மிக முக்­கி­ய­மான, அடிப்படை ன, ஆதா­ர­மான, கண்­கூ­டான சொத்­தாக வீடமைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் திகழ்­கின்­றன.

மக்­க­ளின் விருப்­பங்­க­ளுக்கு ஏற்­ப­வும் காலத்­திற்குப் பொருத்தமாக­வும் அப்­போ­தைக்கு அப்­போது தொடர்ந்து வீட்டு வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டும் வரு­கின்­றன. சிங்­கப்­பூ­ரின் வெற்­றி­க­ர­மா­ன­ பொது வீட­மைப்­புக் கொள்கை இதற்கு வகை செய்­கிறது.

எல்­லா­ருக்­கும் வீடு என்­பதே அர­சாங்­கத்­தின் இலக்கு. இதை மானி­யங்­கள் மூலம் அர­சாங்­கம் நிறை­வேற்றி வரு­கிறது.

பொது பணத்­தைக்கொண்டு கட்­டப்­ப­டு­கின்ற வீடு­க­ளின் அடிப்படை நோக்­கம் மக்கள் உல­கத் தர வச­தி­க­ளு­டன் சொந்த வீட்­டில் குடி­யிருக்க வகை செய்­வ­து­தான்.

வீடுகளின் மதிப்புக் கூட வேண்டும்; பொது வீடுகளின் மதிப்பு, போட்டித்திறன்மிக்கதாக தொடர்ந்து மேம்பட்டுவரவேண்டும்; அதன்மூலம் நாட்டில் மக்களின் தேசிய உடைமையைத் தொடர்ந்து வலுவாக்கி வரவேண்டும் என்ற நோக்கத்துடன் பொது வீடுகளைக் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விற்பதற்கும் அரசாங்கம் அனுமதிக்கிறது. இதற்காகத்தான் மறுவிற்பனை சந்தை செயல்படுகிறது.

ஆனாலும் மக்களுக்குக் கட்டுப்படிகக்கூடிய விலையில் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த இடம்பெறுகின்ற அரசாங்க மானி யங்கள், வீட்டை பணத்துக்காக விற்று காசாக்கும் ஒரு வழிக உருவாகிவிடக்கூடாது என்பது கட்டாயமானது.

இந்த ஆண்டில் குறைந்தபட்சம் $1 மில்லியன் விலையுள்ள வீவக வீடுகள் சாதனை அளவில் கைமாறி இருக்கின்றன. முதல் ஒன்பது மாத காலத்தில் அத்தகைய 174 வீடுகள் விற்பனைகி உள்ளன. சென்ற ஆண்டு முழுவதற்கும் இந்த எண்ணிக்கை 82 ஆகத்தான் இருந்தது.

இந்த நிலவரம், வீவக வீடுகள் அதிர்ஷ்ட தேவதை களாக பார்க்கப்படும் ஒரு சூழலை உருவாக்கி உள்ளது. அதேவேளையில், நீண்டகால போக்கில் வீட்டு விலை தங்களுக்கு எட்டாத அளவுக்குப் போய்விடுமா என்று கவலைப்படும் சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை, இந்த $1 மில்லியன் நிலவரம் ஓரள வுக்குக் கவலையை ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மைதான்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மறு விற்பனை சந்தையில் கிராக்கி அதிகமாகவே இருந்து வருகிறது. அது பொதுவான ஒரு நிலவரம். ஆனால் பொது வீடுகள் என்று வரும்போது அவற்றின் விலைகளை இத்தகைய மில்லியன் வெள்ளி அளவை அடிப்படைகக்கொண்டு தீர்மானிக்கும் ஒரு போக்கு இடம்பெற்றுவிடக்கூடாது.

எங்குமே ஒரு வீட்டின் அமைவிடம் அதன் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மிக முக்கியமான நகர்ப் பகுதியில், பிரதான பகுதியில் அமையும் வீடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. நாட்டின் பிரதான இடங் களில், மைய இடங்களில் எதிர்கால வீவக வீடுகளை கட்டுவதற்கான திட்டங்களை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. அத்தகைய வீடுகளுக்குத் தேவை அதிகமாக இருக்கும் என்பது நிச்சயம் என்பதால் கூடுமானவரை அவை கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைக்க வழி இருக்க வேண்டும்.

பணம் ஈட்டும் நோக்கத்தில் அந்த வீடுகள் வாங்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைக் கருத்தில்கொண்டுதான் புதிய ஒரு முன்மாதிரியை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. இந்த ஏற்பாடு, அத்தகைய வீடுகளின் விலைகள் கட்டுப்படிகக் கூடியதாக இருக்கும் என்பதையும் எல்லாரையும் உள்ளடக்கும் வகையில் அவை திகழும் என்பதையும் உறுதிப்படுத்தும்.

இதைச் செய்வதற்காக அரசாங்கம் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறது.

பிரதான, மைய இடங்களில் வருங்காலத்தில் கட்டப்படும் வீவக வீடுகளின் குறைந்தபட்ச அனு போகக் காலம் 10 ஆண்டுகளாக இருக்கும்.

அந்த வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் செலவிட்டு இருக்கும் கூடுதலான மானியங்களை, அந்த வீடுகளை விற்கும்போது கிடைக்கும் லாபத்தில் இருந்து திருப்பி அரசுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பவை நிபந்தனைகள்.

பொது வீடுகள் அவற்றை விற்று அதன்மூலம் சொந்த லாபம் ஈட்டுவதற்காக அல்ல; சிங்கப்பூரர்கள், அவர்கள் எந்த பகுதியில்-அதாவது பிரதான பகுதியில் வசித்தாலும் சரி- வேறு இடத்தில் வசித்தா லும் சரி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மானி யங்கள் நியமான முறையில் இருக்கின்றன என்பதை எல்லாம் அவை உறுதிப்படுத்தும்.

குறைந்தபட்ச அனுபோகக் காலம் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் வீடுகளை விற்பதன் தொடர்பிலான உடனடி ஊக பேர சிந்தனைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும். அத்தகைய வீடுகளை வாங்குவோருக்கான பிரதான நோக்கம் குடியிருப்பது தான் என்ற ஓர் எண்ணத்தையும் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

இப்படிப்பட்ட ஒரு நோக்கம் வீடு வாங்கு வோரிடையே இருந்தால்தான், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சமூகக் கடமை நிறைவேற வழி ஏற்படும்.

தனிர் வீடுகள் வேறு, வீவக வீடுகள் வேறு. தனிர் வீடுகளுக்கு அரசு மானியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீவக வீடுகள் குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்டவை.

பொது வீட்டு வசதியைப் பொறுத்தவரை, வீட்டு உரிமைளர்களும் வீடுகளை வாங்குவோரும் ஓர் உண்மை நிலவரத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.

பிரதான, மத்திய பகுதிகளில் அல்லாமல் வேறு எந்தவோர் இடத்திலும் அமைந்திருக்கும் எந்தவொரு வீவக வீடும் மதிப்பிலோ, வசதியிலோ குறைந்தது அல்ல; ஒரு வீட்டின் அமைவிடம் முக்கியமானது என்றாலும்கூட அதுவே எல்லாம் என்று ஆகிவிடாது.

நல்ல வசதிகள், நல்ல போக்குவரத்து தொடர்புகள், குடியிருப்புப் பேட்டைகளுக்கு இடைப்பட்ட நெருக் கங்கள் ஆகிய அம்சங்களோடு வீவக ஒவ்வொரு வருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப குடியிருப்பு வசதிகளைச் செய்து தந்து வருகிறது;

பிரதான, மத்திய வட்டாரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் பல பேட்டைகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அனுபவிக்கும் வசதிகள், வாழ்க்கைத் தரம் எல்லாம் மனநிறைவாக இருப்பதை அன்றாட வாழ்வில் கண்டுகொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!