மாணவர்களுக்குப் பொருத்தமான பள்ளியைத் தேர்வு செய்ய பெற்றோருக்கு யோசனை

பெற்­றோர், தங்­கள் பிள்­ளை­களுக்கு நாட்­ட­முள்ள, அவர்­களின் கற்­றல் திறமைக்கு ஏற்ற உயர்­நிலைப்பள்­ளி­யைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்று ஆலோ­சனை கூறப்­பட்டு உள்­ளது.

தங்­கள் பிள்­ளை­யின் கல்வி கற்­கும் ஆற்­ற­லைப் புறந்­தள்­ளி­விட்டு, பிரபலமான பள்­ளிக்­கூடங்­கள்­தான் தேவை என்று முடிவு செய்­தால் சாத­கத்­தை­விட பாத­கம்­தான் அதி­க­மாக இருக்­கும் என்று ராஃபிள்ஸ் பள்ளி முதல்­வர் ஃபெட்ரிக் இயோ குறிப்­பிட்­டார்.

எந்­தப் பள்­ளி­யைத் தேர்ந்­தெடுப்­பது என்­ப­தன் தொடர்­பில் பிள்ளை­ க­ளு­டன் பெற்­றோர் பேச வேண்டும்.

படிக்­கப் போகும் பிள்­ளை­யின் விருப்­பத்­தைப் பொறுத்தே பள்­ளிக்­கூ­டங்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும். பெற்­றோர் விரும்­பும் பள்­ளிக்­கூ­ட­மாக அது இருக்­கக் கூடாது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் விவேக பெற்­றோர் இணை­யக் கருத்­த­ரங்கு நேற்று நடந்­தது. அதில் 10 பள்ளி முதல்­வர்­கள் கலந்­து­கொண்­டனர்.

அவர்­கள் பெற்­றோர்­க­ளுக்­குப் பற்­பல யோச­னை­க­ளைத் தெரி­வித்­த­னர். பெற்­றோர்­க­ளின் பல்­வேறு கேள்­வி­க­ளுக்­கும் அவர்கள் விளக்­கம் அளித்­த­னர்.

வழக்­க­நிலை (தொழில் கல்வி), வழக்­க­நிலை (ஏட்­டுக்­கல்வி), விரைவு நிலை தரம் பிரிப்­புக்­குப் பதி­லாக முற்­றி­லும் பாடங்­களை அடிப்­ப­டை­யா­கக்கொண்ட ஓர் ஏற்­பாடு நடப்­புக்கு வரும் என்று 2019ல் கல்வி அமைச்சு அறி­வித்­தது.

புதிய ஏற்­பாட்­டின்­படி தங்­க­ளு­டைய ஆற்­ற­லுக்கு ஏற்ப மாண­வர்­கள் உயர்­நி­லை­யில் அல்­லது கீழ்­நி­லை­யில் பாடங்­க­ளைப் படிப்­பார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!