ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரக் குடியிருப்பாளர்களுக்காகப் புதிய சமூகத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்
மூலம் ஈஸ்ட் கோஸ்ட் வட்டார குடியிருப்பாளர்கள் கிளௌட் கணினி முறை, சுகாதாரப் பராமரிப்பு, உற்பத்தித்திறன் ஆகிய துறைகள் தொடர்பாகப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.
கெப்பிட்டலேண்ட் முதலீட்டு நிறுவனம் தலைமை தாங்கும் 'தி ஸ்மார்ட் அர்பன் கோ-இன்னோவேஷன் லேப் @ ஈஸ்ட் கோஸ்ட்' ஆய்வுக்கூடம் எட்டு பங்காளித்துவ நிறுவனங்களுடன் புதிய
திட்டத்தைத் தொடங்குகிறது.
நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் ஒத்துழைக்க புதிய திட்டங்களும் நடவடிக்கைகளும் வாய்ப்பு வழங்கும் என்றும் சமூக, வர்த்தக விவகாரங்களுக்கும் அவை தீர்வு காண உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்துக்குத் தேவையான திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. நகர்ப்புற விவசாயம், மாற்று புரதச்சத்து போன்றவற்றை புதிய வளர்ச்சித் துறைகளை ஆய்வுக்கூடம் ஊக்குவிக்கிறது.
திட்டத்தின் அறிமுக விழா நேற்று சாங்கி வர்த்தகப் பூங்காவில் உள்ள ரோட் அண்ட் சுவார்ட்ஸ் ஆலையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான், புதிய வேலைகளை உருவாக்க ஆய்வுக்கூடமும் அதன் பங்காளிகளித்துவ நிறுவனமும் இணைந்து செயல்படுவதாகக் கூறினார். குடியிருப்பாளர்களுக்குத் தரமான வேலைகளை உருவாக்கு வது மட்டுமல்லாது, புதிய ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு இத்திட்டம் உதவும் என்றார் அவர்.
அறிமுக விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உட்பட ஏனைய ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்
பினர்களும் கலந்துகொண்டனர்.
குடியிருப்பாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்த ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியும் அதன் அடித்தள அமைப்புத் தலைவர்களும் இணைந்து நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் இந்த ஆய்வுக்கூடமும் ஒன்று. இத்திட்டங்களின் மூலம் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம், கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் இரண்டாவது அறிவார்ந்த இணைப் புத்தாக்க ஆய்வுக்கூடமாகும். முதல் ஆய்வுக்கூடத்தை அது கடந்த ஆண்டு சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் திறந்தது.
அதில் 500க்கும் மேற்பட்ட நிறு
வனங்கள் கலந்துகொண்டுள்ளன. சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் உள்ள ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டதிலிருந்து 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதில் சேர்ந்துள்ளனர்.