ஒட்டுண்ணிகளால் தொல்லைகள் மட்டுமே ஏற்படும் என்ற தவறான எண்ணத்தை கலைக்க லீ கொங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தில் ஒட்டுண்ணியை மையமாகக் கொண்ட காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
வேறோர் உயிரினத்தின் உடலில் ஒட்டிக்கொண்டு வாழும் ஒட்டுண்ணி அந்த உடலுக்குக் கெடுதலை விளைவிக்கிறது.
இருப்பினும், சமச்சீரான சுற்றுச்சூழலை உறுதி செய்வதில் ஒட்டுண்ணியின் பங்கு முக்கியமானது என்று காட்சிக்கூடத்துக்குத் தலைமை தாங்கும் திருவாட்டி கேட் பொக்லிங்டன் தெரிவித்தார்.
"உயிரினங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போவதை ஒட்டுண்ணி தடுக்கின்றன," என்றார் அவர். நேற்று திறக்கப்பட்ட காட்சிக்கூடத்தில் அட்டைகள், புழுக்கள், பேண் போன்ற சில ஒட்டுண்ணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கூடத்திற்கான பணிகள் கடந்த ஆண்டு கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது தொடங்கியதாக திருவாட்டி பொக்லிங்டன் கூறினார்.

