விரைவுச்சாலைகளில் பிடிபடும் சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்
திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் விரைவுச்சாலைகளில் மிதிவண்டி ஓட்டியதற்காக 245 பேர் பிடிபட்டனர்.
கடந்த ஆண்டில் இக்குற்றம் தொடர்பாகப் பிடிப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.
விரைவுச்சாலைகளில் மிதிவண்டி ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது பொழுதுபோக்குக்காக மிதிவண்டி ஓட்டுவதில் ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டிலிருந்து விதிமுறைகளை மீறும் சைக்கிளோட்டி களுக்கான அபராதத் தொகை $75லிருந்து $150ஆக அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கடந்த வாரம் தெரிவித்தது.
விரைவுச்சாலைகளில் மிதிவண்டி ஓட்டுதல், போக்குவரத்து விளக்குகள் சிவப்பு நிறத்தைக் காட்டும்போது நிறுத்தாமல் செல்வது, ஒற்றைத் தடம் கொண்ட சாலைகளில் ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல் ஒருவர் பக்கத்தில் இன்னொருவராக மிதிவண்டி ஓட்டுவது போன்ற விதிமீறல்
களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
50க்கும் மேற்பட்ட விரைவுச்சாலை நுழைவாயில்களில் மிதிவண்டிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பலகைகள் போடப்பட்டிருப்பதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் கூறியது.
இந்த விதிமுறையைப் பற்றி சைக்கிளோட்டிகளுக்கு நினைவூட்ட அண்மையில் வண்ணமயமான, பெரிய எழுத்துகளையும் படங்களையும் கொண்ட அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
இவை போக்குவரத்து அதிகம் உள்ள அப்பர் தாம்சன் சாலை (சிலேத்தார் விரைவுச்சாலைக்கு முன்பான பகுதி), ஜாலான் அகமது இப்ராஹிம் மற்றும் துவாஸ் வெஸ்ட் சாலை (ஆயர் ராஜா விரைவுச்
சாலைக்கு முன்பான பகுதிகள்), ஜாலான் அனாக் புக்கிட் (தீவு விரைவுச்சாலைக்கும் புக்கிட் தீமா விரைவுச்சாலைக்கும் முன்பான பகுதி), பாலஸ்டியர் சாலை
(மத்திய விரைவுச்சாலைக்கு முன்பான பகுதி) ஆகிய நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
"நிலைமையை நாங்கள் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் மற்ற இடங்களிலும் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை நாங்கள் பொருத்துவோம்," என்று
ஆணையம் கூறியது.
விதிமுறைகளைக் கடைப்
பிடிக்குமாறு சைக்கிளோட்டிகளை அது கேட்டுக்கொண்டது.