மாறுபட்ட சமயக் குழுத் தலைவர் என்று கூறப்படுபவரிடம் விசாரணை

மாறு­பட்ட சம­யக் குழு ஒன்­றின் தலை­வர் எனக் கூறப்­படும் ஆட­வர் ஒரு­வ­ரி­டம் போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) இதன் தொடர்­பில் போலி­சி­டம் புகார் அளித்­துள்­ள­தைத் தொடர்ந்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் கேள்­வி­

க­ளுக்கு நேற்று முன்தினம் பதி­ல் அளித்த முயிஸ் செய்தித் தொடர்பாளர், பொது நிலை­யி­

லி­ருந்து வில­கி­ய­தா­கக் கூறப்­படும் அந்­தச் சம­யக் கோட்­பா­டு­கள் தொடர்­பில் முயிஸ் அதன் விசா­ர­ணையை நிறைவு செய்­துள்­ள­தா­கக் கூறி­னார்.

"இந்த விவ­கா­ரம் குறித்து அதி­கா­ரி­க­ளு­டன் நாங்­கள் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி வரு­கி­றோம். இது, போலிஸ் விசா­ர­ணை­யின்­கீழ் உள்­ள­தால் எங்­க­ளால் மேல்

­வி­வ­ரங்­களை வழங்க இய­லாது," என்­றார் அவர்

இந்­நி­லை­யில், தன்­னி­டம் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளதை போலிஸ் உறு­திப்­ப­டுத்­தி­யது.

"தகு­தி­பெற்ற, பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளி­டம் இருந்து

மட்­டுமே சமய வழி­காட்­டு­தல்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு சமூ­கத்­தி­ன­ருக்கு மீண்­டும் ஒரு­முறை நாங்­கள் நினை­வு­ப­டுத்­து­கி­றோம்," என்று முயிஸ் கூறியது.

நகர்ப் பகு­தி­யில் சிறிய உண­வ­கம் ஒன்றை நடத்­தி­வ­ரும் அந்­தச் சம­யக் குழு, அங்கு சமய வகுப்­பு­களை நடத்­து­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

முன்­னாள் உடற்­பி­டிப்­புச் சிகிச்­சை­யா­ளர் ஒரு­வர் அந்­தக் குழு­வுக்­குத் தலைமை தாங்­கு­வ­தாக நம்­பப்­ப­டு­கிறது. 1990களில் அவர் தைல வகைகளை விற்பனை செய்ததாகவும் நிகழ்ச்­சி­களில் ஆசி வழங்­கி­ய­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது.

அவர் திரு­ம­ண­மா­ன­வர் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

அந்­தக் குழு 15 ஆண்­டு­

க­ளுக்கு முன்பு தொடங்­கப்­பட்­ட­தாக அதை முன்பு பின்­பற்­றி­ய­வர்­களும் அக்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்ள மாதர்­கள் மூவ­ரின் முன்­னாள் கண­வர்­களும் கூறி­னர்.

அந்­தக் குழு­வின் தலை­வ­ரு­டன் 'ஆன்­மீக ரீதி­யாக திரு­ம­ணம்' புரி­வ­தற்­காக அந்த மாதர்­கள் தங்­க­ளை­விட்டு பிரிந்­து­விட்­ட­தாக அவர்­க­ளின் முன்­னாள் கண­வர்­கள் கூறி­னர்.

போலி­சார் தங்­களை விசா­ரித்­த­தாக அந்த மாதர்­க­ளின் முன்­னாள் கண­வர்­கள் மூவ­ரும் அந்­தக் குழுவை முன்பு பின்­பற்­றிய ஒரு­வ­ரும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கூறி­னர்.

2015ஆம் ஆண்டு அக்­டோ­ப­ரில் அந்­தக் குழுத் தலை­வர் பற்றி முயி­சி­டம் புகார் அளிக்­கப்­பட்டு இருந்­த­தாக முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கடந்த ஏப்­ரல் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்து இருந்­தார்.

எனி­னும், அவர்­மீது விசா­ரணை நடத்­து­வ­தற்கு அப்­போது போதிய ஆதாரம் கிடைக்­க­வில்லை.

இந்த வழக்­குப் பின்­னர் ஃபத்வா குழு­வி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதில், அந்த ஆட­வர் மற்­றும் அவ­ரது குழு­வின் நம்­பிக்­கை­க­ளுக்கு அடிப்­படை சமய ஆதா­ரம் இல்லை என ஃபத்வா குழு கூறி­யது.

நம்­ப­கத்­தன்­மை­யு­டைய சமய மூலங்­களில் இருந்து பெறப்­ப­டாத யோச­னை­க­ளை­யும் செயல்­மு­றை

­க­ளை­யும் பரப்­பு­வதை நிறுத்த வேண்­டும் என்று அவ­ருக்கு

உத்­த­ர­வி­டப்­பட்­டது.

குணப்­ப­டுத்­தும் சேவை வழங்கு­வ­தை­யும் நிறுத்த வேண்­டும் என்று அவ­ருக்கு உத்­த­ர­

வி­டப்­பட்­டது.

வரும் திங்­கட்­கி­ழமை தொடங்­கும் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் இந்த விவ­கா­ரம் குறித்து

அமைச்­சர் மச­கோஸ் பேசு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!