கிருமித்தொற்றினால் தேக்கா சந்தையில் நேரில் வந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்ததிலிருந்து பல கடைக்காரர்கள் இணைய விற்பனைக்கு மாறியுள்ளனர்.
பரக்கத் கறி கடை கடந்த ஓராண்டாக இணையத்திலும் ஆஸ்திரேலியா இறைச்சியை விற்பனை செய்கிறது. "திங்கள் முதல் வியாழன்வரை நேரில் வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டாலும், இணைய விற்பனை, வாரத்தில் அனைத்து நாட்களும் சிறப்பாக நடக்கின்றது.
தீபாவளி என்பதால் அதிகமான வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவார்கள் என்று நம்பு கிறோம்." என்றார் கடை உரிமையாளர் திரு பரக்கத் (படம்).
லிட்டில் இந்தியா கடைகள் சில ஆட்பற்றாக்குறையினால் சில சேவைகளை மூடியுள்ளன. இந்த பிரச்சினையைச் சமாளிக்க இணைய வர்த்தகம் உதவுகிறது என்றார் ஸ்ரீமுருகன் டிரேடிங்கின் உரிமையாளர் திரு ராமலிங்கம்.
"இவ்வாண்டு மளிகைப் பொருட்களின் இணைய விற்பனை கூடியுள்ளது. லிட்டில் இந்தியாவில் உள்ள பிற மளிகைக் கடைகளுக்கும் இணைய வர்த்தகம் நல்ல வருமான தளமாக அமைந்துள்ளது, இணையம் வழியான ஆர்டர்களின் எண்ணிக்கை 30% அதிகரித் திருப்பதாக அவர் கூறினார்.