வீட்டிலேயே முறுக்கு சுட்டு குக்கீஸ் செய்தாலும், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கடைகளிலிருந்தே பலகாரங்களை வாங்குகின்றனர்.
இந்தியாவில் பிரபலமான அடையார் ஆனந்த பவன், சென்னையின் க்ராண்ட்ஸ் ஸ்னாக்ஸ், பெங்களூரின் அய்யங்கார், திருச்சியின் அஸ்வின் ஸ்வீட்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், லால் ஸ்வீட்ஸ் போன்ற கடைகளின் பலகாரங்களை தேடிப் பிடித்து வாங்குபவர்கள் பலருண்டு.
அப்துல் ரஹீம் கடை பலகாலமாக இந்தியாவிலிருந்து வரும் பலகாரங்களை விற்கிறது. மேலும் பல கடைகளிலும் இப்பலகாரங்கள் கிடைக்கின்றன.
நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'ஓவி ஈட்ஸ் அண்ட் டிரீட்ஸ்', இந்திய பலகாரங்களை தவிர்த்து, உள்ளூரிலேயே வீட்டில் குக்கீஸ் செய்து விற்பனை செய்பவர்களிடமிருந்து மொத்தமாக வாங்கி கடையில் விற்கிறது.