கொவிட்-19உடன் தொடர்பிலான உடல்நலச் சிக்கல்களால் 63 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்ட 14 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே மருத்துவச் சிக்கல்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. புதிய மரணங்களுடன் சிங்கப்பூரின் மொத்த மரண எண்ணிக்கை 394க்கு உயர்ந்துள்ளது.
சனிக்கிழமையின்போது புதிதாக 3,112 கிருமித்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 2,608 சமூகத் தொற்றுகளாக உள்ளன. ஊழியர் தங்கும் விடுதிகளில் 500 கிருமித்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த நான்கு பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டது.
சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட சமூக கிருமித்தொற்றுகளில் 60 வயதுக்கும் மேற்பட்ட 408 பேர் அடங்குவர். சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று தற்போது 195,211ஐ எட்டியுள்ளது.