பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வட்டாரவாசிகளை ஊக்குவிப்பதற்காக துடைப்பான்கள் போன்ற சுத்தம் செய்வதற்கான கருவிகளை வைப்பதற்கான இடங்கள் தீவு முழுவதும் உள்ள குடியிருப்புப் பேட்டைகளில் நிறுவப்படும்..
பொது சுகாதாரத்துறை மன்றத்தால் இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இவ்வாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட ‘எஸ்ஜி தூய்மை நாள்’ வருடாந்திர நிகழ்வுக்குப் பதிலாக காலாண்டுதோறும் நடைபெறும் ஒன்றாக இது விரவுபடுத்தப்படும் என்று மன்றம் கூறியது.
இந்நாட்களில் பொது இடங்கள், பூங்காக்கள், திறந்த இடங்கள், அடுக்குமாடி தரைத்தளங்கள் போன்ற இடங்களில் எந்தத் துப்புரவு பணியும் நடைபெறாது. துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் குப்பை எவ்வளவு குவிகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அடுத்த ஆண்டில் இந்த தினம், மாதத்திற்கு ஒருமுறை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.