வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிறப்பு ஆலய வழிபாடு

வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிறப்பு ஆலய வழிபாடு

2 mins read
d631e149-b194-4dff-93ed-65b097b7d2bc
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி சிறப்பு வழிபாட்டில் இந்து வெளிநாட்டு ஊழியர்களுடன் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 சூழ­லில் தங்­கு­வி­டு­தி­க­ளை­விட்டு வெளியே செல்ல முடி­யா­மல் தவிக்­கும் பல வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு தீபா­வளியை முன்­னிட்டு கோவில் செல்ல வாய்ப்பு கிடைத்­தது.

கிட்­டத்­தட்ட 40 வெளி­நாட்டு ஊழி­யர்­கள், நேற்று 'காமன்­வெல்த்' முனீஸ்­வ­ரன் ஆல­யத்­திற்­குச் சென்­றி­ருந்­த­னர். தீபா­வ­ளியை முன்­னிட்டு சிறப்பு வழி­பாடு நடை­பெற்­ற­து­டன் அன்­ப­ளிப்­புப் பைகளும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

அன்பளிப்புப் பைகளை மனி­த­வள அமைச்­சர் திரு டான் சீ லெங் வழங்­கி­னார்.

மனி­த­வள அமைச்­சுக்­குக் கீழ் நிர்­வா­கம், உத்­த­ர­வா­தம், பரா­ம­ரிப்பு மற்­றும் ஈடு­பாட்டுக் குழு­வான 'ஏஸ்'(ACE), சிறப்பு வழி­பா­டு­க­ளைக் குறிப்­பிட்ட சில கோவில்­களில் ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறது.

முறுக்கு, அதி­ர­சம், பால்­கோவா, லட்டு என வித­வி­த­மான பல­காரங்­கள், பல்­வேறு பழச்­சா­று­கள் மற்­றும் திரு­நீறு போன்­றவை அன்­ப­ளிப்­புப் பைகளில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

"வாரத்­தில் ஒன்று அல்­லது இரண்டு முறை கேளிக்கை நிலை­யங்­க­ளுக்­குச் செல்­வ­தைத் தவிர வெளியே செல்­லும் வாய்ப்பு எங்­களுக்கு அதி­கம் கிடை­யாது," என்று கட்­டு­மானப் பணி­யில் மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு வைர­முத்து கூறி­னார். இது­போன்ற நிகழ்­வு­கள் அவ­ருக்கு மன­நி­றைவை அளிப்­ப­தாகக் கூறு­கி­றார்.

"நம் குமு­றல்­க­ளுக்­குச் செவி­சாய்க்க மன­நல ஆலோ­ச­கர்­கள் பலர், வாரத்­தில் இரண்டு முறை­யா­வது வந்து நலம் விசா­ரிப்­பர். எங்­கள் முத­லா­ளி­களும் குறை ஏது­மின்றி எங்­கள் ஆரோக்­கி­யத்­திற்­கும் மன­ந­லத்­திற்­கும் அதிக முக்­கி­யத்­து­வம் தரு­கி­றார்­கள்," என்று திரு ஆனந்­தன் தெரி­வித்­தார்.

காலாங் வாம்­போ­வில் அமைந்­துள்ள தங்­கு­வி­டுதி ஒன்­றில் வசிக்­கும் திரு ஆனந்­தன் மற்­றும் திரு வைர­முத்து, வெளி­நாட்டு ஊழி­யர்­களின் சார்­பாக தங்­க­ளின் மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­த­னர்.

"மீள்­தி­ற­னு­டன் கடி­ன­மாக உழைக்­கும் இந்த ஊழி­யர்­க­ளுக்கு உதவி செய்தே தீர வேண்­டும் என்று எனக்­குத் தோன்­றி­யது," என்­றார் நிகழ்­வுக்கு நன்­கொடை வழங்­கி­யி­ருந்த திரு சந்­தி­ரன் மோகன்.

இன்­னும் பல அரசு சாரா அமைப்­பு­கள் இந்த நிகழ்­வில் பங்­கு­பெற வேண்­டும் என்­பதே இவ­ரு­டைய கோரிக்கை.

வரும் 7ஆம் தேதி­யன்று ஸ்ரீ வைராவி­மட காளி­யம்­மன் ஆல­யம், ஸ்ரீ ருத்ர காளி­யம்­மன் ஆல­யம், ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யம் ஆகி­ய­வற்­றில் இன்­னும் பல வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இது­போன்ற சிறப்பு வழி­பா­டு­கள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குத் தொடர்ந்து பரி­வும் ஆத­ர­வும் வழங்­கப்­ப­டு­வ­தற்­குச் சான்­றாக இந்­தச் சிறப்பு வழி­பா­டு­கள் திகழ்­கின்­றன.

கூடு­தல் செய்தி:

பாவை சிவக்­கு­மார்