விழாக்காலத்தில் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது கேலாங் சிராய் சந்தை

விழாக்காலத்தில் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது கேலாங் சிராய் சந்தை

2 mins read
63b16798-d14f-47c7-a304-af53c2354e48
-

கேலாங் சிராய் சந்தை இன்று தொடங்கி புதன்­கி­ழமை வரை மூடப்­பட்­டி­ருக்­கும். கடந்த ஏழு நாட்­க­ளாக அங்கு கொவிட்-19 சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தால் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

நன்கு சுத்­தம் செய்து கிருமி நீக்­கும் பணி­களை வளா­கத்­தில் மேற்­கொள்ள இருப்­ப­தால் சந்தை மூடப்­பட்­டி­ருக்­கும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரியத்தின் துண்­டுப் பிர­சு­ரங்­கள் சந்­தை­யில் ஆங்­காங்கே ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.

இருப்­பி­னும், மூடப்­ப­டு­வ­தற்­குக் கார­ணம் என்ன என்­பது பிர­சு­ரத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

வாடஸ்­அப் செய­லி­யில் வலம்­வரும் தக­வல் ஒன்­றின்­படி, கொவிட்-19 சம்­ப­வங்­கள் அவ்­விடத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சமூக ஊட­கங்­களில் சந்தை இவ்­வாறு மூடப்­ப­டு­வது குறித்து சனிக்­கி­ழமை முதல் தக­வல் வலம் வரத்­தொ­டங்­கி­யதை அடுத்து, சந்தை­யில் கடை வைத்­தி­ருப்­போர் திக்­கு­முக்­கா­டிப் போயி­னர்.

பின்­னர், சந்தை மூடப்­ப­டு­வதை தேசிய சுற்­றுப்புற வாரியத்தின் அதி­கா­ரி­கள் நேற்று காலை உறு­திப்­படுத்­தி­விட்­ட­னர்.

மூன்­றாம் தலை­மு­றை­யாக இறைச்சி விற்­கும் வியா­பா­ரத்­தில் உள்ள முகம்­மது ஷாஹித், 32, விழாக்­கா­லத்தை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்­த­தா­கக் கூறி­னார்.

வியா­ழக்­கி­ழ­மை­யன்று தீபா­வளி கொண்­டா­டப்­படும் நிலை­யில் இந்துக்­கள் பல­ரும் சந்­தைக்கு வரு­வர் என்­றும் இத­னால் தங்களின் வியா­பா­ரம் அமோ­க­மாக இருக்கும் என்­றும் கடைக்­கா­ரர்­கள் நினைத்­தி­ருந்­தனர்.

திரு ஷாஹித் போல சந்­தை­யில் இறைச்சி வியா­பா­ரம் வைத்­தி­ருக்­கும் பல கடைக்­கா­ரர்­கள், இந்து வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வரு­கைக்­காக காத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இவ்­வாறு விழாக்­கா­லத்­தில் சந்தை மூடப்­ப­டு­வது குறித்­துக் கடைக்­கா­ரர்­கள் பலர் புலம்­பு­கின்­றனர் என்­று திரு ஷாஹித் கூறி­னார்.

சந்­தைக்­குள் வரு­வ­தற்­காக வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் நேற்­றுக் காலை நீண்ட வரி­சை­யில் காணப்­பட்­ட­னர்.

இருப்­பி­னும், சந்தை பிற்­ப­கல் 1 மணிக்­குள் ஆள் நட­மாட்­டமே இல்­லாது காணப்­பட்­டது. பெரும்பாலான கடை­கள் மூடியும் ­விட்­டன.

இதன் தொடர்­பில் தேசிய சுற்­றுப்­புற வாரியமும் சுகா­தார அமைச்­சும் அறிக்கை வெளி­யி­டும் என்று நேற்­றி­ரவு நில­வ­ரப்­படி அறி­யப்­பட்­டது.