சிறையில் மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் அதிகாரியாக ஆக அதிகக் காலம் பணிபுரிந்த 89 வயது தர்ஷன் சிங், கொவிட்-19 தொற்றால் எழுந்த சிக்கல்களால் நேற்று உயிரிழந்தார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக ஈசூன் சமூக மருத்துவமனையில் திரு சிங் சேர்க்கப்பட்டார். நீரிழிவு நோய், 'டிமென்ஷியா' போன்றவற்றாலும் திரு சிங் பாதிக்கப்பட்டிருந்தார்.
சிறைக் கைதிகள் அவரைப் பெரிதும் மதித்ததாக ஓய்வுபெற்ற சிறை உதவி இயக்குநர் அ.முத்துக்குமாரசாமி, 89, தெரிவித்தார்.
கொவிட்-19க்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் திரு சிங் போட்டுக்கொண்டார்.
நேற்று அவரது இறுதிச் சடங்கு சுவா சூ காங்கிலுள்ள முஸ்லிம் இடுகாட்டில் நடந்தது.

