இரவு 10.30 மணிக்குப் பின்னரும் ஓயாத ஒன்றுகூடல்கள்

இரவு 10.30 மணிக்குப் பின்னரும் ஓயாத ஒன்றுகூடல்கள்

2 mins read
380aaa43-58fc-4305-8d47-b838b55a87bf
சிலேத்தார் நார்த் லிங்க் பாலத்தில் குழுக்களாக சிலர் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொடர்­பில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மீறும் வாய்ப்பு, பிடி­படும் அபா­யம் உள்ள நிலை­யி­லும் சிலர் இரவு 10.30 மணிக்கு மேல் தங்­க­ளின் சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட வண்­ணம் உள்­ள­னர்.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வடிக்­கை­கள்) (கட்­டுப்­பாட்டு ஆணை) விதி­மு­றை­கள் 2020 நடை­மு­றைப்­படி, 10.30 மணிக்கு மேல் மது அருந்­து­தல் தடை­செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு சில காப்­பிக் கடை­களும் உண­வ­கங்­களும் இர­வில் மூடிய பிறகு மது அருந்­தும் தங்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக இயங்­கு­கின்­றன.

இவ்­வாறு இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்­து­தல் தொடர்­பான தடையை மீறு­வோருக்கு $1,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு $2,000 வரை அப­ரா­தம், அல்­லது மூன்று மாதம் வரை சிறைத் தண்­டனை, அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.

மது அருந்­தக்­கூ­டிய கடை­களில் கூடும் வாடிக்­கை­யா­ளர் கூட்­டத்­தைக் கலைப்­பது எளி­தான காரி­யம் அல்ல என்று பணி­யா­ளர்­கள் சிலர் பகிர்ந்­து­கொண்­டுள்­ள­னர்.

இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்­து­த­லுக்­குத் தடை உள்­ள­து­டன், தற்­போது அமர்ந்து சாப்­பிடு­வ­தற்­குத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட இரண்டு பேருக்கு மட்­டுமே அனு­மதி உள்­ளது. சமூக ஒன்­று­கூ­டல்­களி­லும் இரு­வர்­தான் கலந்­து­கொள்­ள­லாம்.

இதற்­கி­டையே கடந்த மாதம் இரண்டு சனிக்­கி­ழ­மை­களில் சிலேத்­தார் நார்த் லிங்க் பாலத்­தில் கிட்­டத்­தட்ட 40 பேர் கூட்­டம் கூட்­ட­மாக அமர்ந்­த­படி மது அருந்­திக்­கொண்டு இருந்­த­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்று நம்­பப்­படும் இவர்­கள், நள்­ளி­ர­வு­வரை மது அருந்­தி­ய­படி இருந்­த­னர். போலிஸ் அதி­காரி வந்து எச்­ச­ரித்த பின்­னர் தங்­க­ளின் தங்கு­வி­டு­திக்­குத் திரும்­பி­னர்.