ஆண்டுக்கு 2,000 கொவிட்-19 மரணங்களைச் சந்திக்கக்கூடும்

மிகச் சிறந்த மருத்­து­வப் பரா­ம­ரிப்பு உள்ள நிலை­யி­லும் ஆண்­டுக்­குச் சுமார் 2,000 கொவிட்-19 மர­ணங்­களை சிங்­கப்­பூர் சந்­திக்க நேரி­ட­லாம். அவ்­வாறு இறப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் முதி­ய­வர்­களா­க­வும் ஏற்­கெ­னவே நோய்­வாய்ப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் இருப்­பார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நோய்ப்­ப­ர­வல் கொள்­ளை­நோ­யாக மாறு­வ­தைத் தடுப்­ப­தற்கு அர­சாங்­கம் தனது பங்­குக்கு அதி­கத் தடுப்­பூசி விகி­தம், பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­கள், மித­மான தொற்­றுக்கு எதி­ராக இயற்­கை­யான நோய் எதிர்ப்பு சக்­தியை வலுப்­ப­டுத்­து­தல் ஆகிய உத்­தி­களைக் கலந்து கையா­ளு­கிறது என்­றார் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி.

"சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 மரண எண்­ணிக்கை விகி­தம் உலக அள­வில் 0.2% ஆகும். மற்ற நாடு­களில் தடுப்­பூசி போடு­வ­தற்கு முன் தொற்று கண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை மிக அதி­க­மா­ன­போது, அந்­நா­டு­களில் மரண எண்­ணிக்கை 3% அல்­லது அதற்கு மேல் இருந்­தது. அதை ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் சிங்­கப்­பூ­ரின் விகி­தம் ஆகக் குறை­வா­னது.

"இந்த 0.2% விகி­தம் நிமோ­னியா விகி­தத்­துக்கு ஒப்­பா­னது," என்று டாக்­டர் ஜனில் நேற்று நாடாளு­மன்­றத்­தில் விளக்­கி­னார்.

"இந்­தப் பெருந்­தொற்­றுக்கு முன் பொது­வாக ஆண்­டுக்கு 4,000 நோயா­ளி­கள் சளிக்­காய்ச்­சல், நிமோ­னியா கிருமி, இதர சுவா­சப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக மர­ண­மடைந்­தார்­கள்.

"போது­மான மருத்­து­வப் பரா­ம­ரிப்பு இல்­லாத கார­ணத்­தால் மிகக் கூடு­த­லான மர­ணங்­கள் ஏற்­படும் சூழ்­நி­லை­யைத் தடுக்க சிங்­கப்­பூர் கடு­மை­யா­கப் போராடி வரு­கிறது.

"இன்­னும் தெளி­வா­கச் சொல்­லப்போனால், கொவிட்-19 தொடர்­பான மர­ணங்­களை நாம் சந்­தித்­துக்­கொண்­டி­ருந்­தா­லும் பொது­வாக கொவிட் அல்­லாத ஆண்­டு­களில் நிக­ழும் மர­ணங்­க­ளை­விட நாம் இப்­போது அதி­க­மா­கப் பார்க்க மாட்­டோம்.

"தற்­போ­தைய இந்த நிலைக்கு வர மற்ற உலக நாடு­கள், மரண எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் மிக அதி­க­மான விலை கொடுத்­துள்­ளன," என்­றார் அமைச்­சர்.

"கொவிட்-19 பெருந்­தொற்­று­டன் சிங்­கப்­பூர் வாழ்­கிறது என்று கூறி­னா­லும், நமது வர்த்­த­கங்­க­ளை­யும் எல்­லை­க­ளை­யும் உடனே திறந்­து­விட முடி­யாது. அத­னால் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கும் அபா­ய­முண்டு.

"நாளுக்கு நாள் அதி­க­மான கொவிட்-19 சம்­ப­வங்­கள் ஏற்­ப­டு­வது, மருத்­து­வ­ம­னை­களில் மேலும் அதி­க­மான தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­கள் நிரப்­பப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு சம­மா­கும்.

"இது­நாள்வரை கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்­கை­யைக் குறை­வாக வைத்­தி­ருப்­பது, தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோரை நன்­கு கவ­னித்­துக்­கொள்­வது ஆகியவற்றின் மூலம் சிங்­கப்­பூ­ரின் மரண எண்­ணிக்­கை­யைக் குறை­வாக வைத்­தி­ருப்­பதை அர­சாங்­கம் உறு­தி­செய்­கிறது," என்­றும் டாக்­டர் ஜனில் விவ­ரித்­தார்.

கொவிட் பெருந்­தொற்­று­டன் வாழ வேண்­டும் எனும் சூழ்­நிலை ஒரு­பு­றம் இருக்க, தடுப்­பூசி போடு­தல், பாது­காப்பு நிர்­வாக நடை­முறை­கள் மூலம் மக்­க­ளைக் காத்­தல் ஆகி­யவை தொட­ரும். ஆனால், இந்­தப் பாது­காப்பு முழு­மை­யா­ன­தல்ல. அத­னால்­தான் அதி­க­மானோர் தொற்­றுக்கு ஆளா­கின்­றனர் என்­றார் அமைச்­சர்.

"நாள­டை­வில் மிகச் சிறந்த மருத்­து­வப் பரா­ம­ரிப்பு இருந்­தா­லும் சிங்­கப்­பூர் ஆண்­டுக்கு சுமார் 2,000 கொவிட்-19 மர­ணங்­க­ளைச் சந்­திக்க நேரி­ட­லாம். கொவிட் பெருந்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளா­லும் மருத்­து­வ­ம­னை­களா­லும் முறை­யான மருத்­து­வப் பரா­ம­ரிப்பு வழங்­கப்­ப­டு­வ­தை­யும் அவர்­கள் இந்த நோய்க்கு எதி­ராக சிறந்த முறை­யில் போராட வாய்ப்­பளிப்­ப­தை­யும் நாம் அனை­வ­ரும் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

"தற்­போ­தைய நிலைமை நிரந்­த­ர­மா­காது. நாம் ஒருநாள் இதி­லி­ருந்து மீண்டு வரு­வோம். விரை­வில் நம்­மில் மிக அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்­கள். தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தா­லும் அவர்­கள் மிக விரை­வில் குண­ம­டை­வார்­கள்," என்­றார் திரு ஜனில்.

ஆனால், அந்த நிலை­மையை அடைய கொவிட் தொடர்­பான மர­ணங்­களை மிகக் குறைந்த அள­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்று கூறி­னார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!