மாதர் சாசனத்தில் பரிந்துரைக்கப்படும் புதிய நடைமுறைகளின்படி, பெற்றோர் மணவிலக்கில் சிக்கும் பிள்ளைகளுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும். மணமுறிவுக்குப்பின், பிள்ளைகளைத் தங்கள் முன்னாள் கணவர் அல்லது மனைவி எளிதில் சந்திக்க முடியாமல் தடுப்பவருக்கு எதிராக அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இந்நடைமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்திருந்தது.
ஆலோசனை பெறுவது, குழந்தை வளர்ப்பு தொடர்பில் தம்பதிக்குத் தகவல் தெரிவிப்பது போன்ற வகையில் பிள்ளைகளைச் சந்திப்பது தொடர்பான நடைமுறைகள் நடப்புக்கு வரும்.
இளம் பிள்ளைகள் உள்ள தம்பதிகள், மணவிலக்குக்கு விண்ணப்பிக்கும் முன் கட்டாய குழந்தை வளர்ப்பு வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற திட்டமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் 21 வயதுக்குக் குறைந்த சுமார் 6,700 பிள்ளைகளின் பெற்றோருக்கு மணமுறிவானது. பெற்றோரின் மணமுறிவால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே ஆதரவு பெறும் திட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.