இணையத் தொடர்புவழி பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை, விரைவில் வாடிக்கையான ஒரு தெரிவாக தம்பதிகளுக்கு வழங்கப்படலாம்.
சிங்கப்பூரின் மின்னிலக்க உருமாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக இது நடைமுறை காணும். மின்னிலக்கத் திருமணச் சான்றிதழ் ஒன்றும் தம்பதிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு இணையம் வழி பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்குத் தகுதிபெற, தம்பதியில் ஒருவராவது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராக அல்லது நிரந்தரவாசியாக இருக்க வேண்டும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

