'வீட்டில் குணமடைவோரின் கவலைகள் நியாயமானதே'

2 mins read
760c2171-8112-4d44-b703-29bf530c9a18
அதிபர் ஹலிமா யாக்கோப்பும் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதுவும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் வீட்டில் குணமடைதல் பணிக்குழு உறுப்பினர்களுடன் உரையாடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு வீட்­டில் குண­ம­டை­வோ­ரின் கவ­லை­களை புரிந்­து­கொள்ள முடி­கிறது. அவர்­க­ளு­டைய கவலை நியா­ய­மா­னதே என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

ஆனால் சிறந்த பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால் அது பற்றி கவலைப்பட ேவண்டிய தில்லை என்று அவர் வலியுறுத்தி னார்.

ஹார்­பர்­ஃபி­ரண்ட் நிலை­யத்­தில் உள்ள வீட்­டில் குண­ம­டை­தல் பணிக் குழு­வின் தலை­மை­ய­கத்­துக்கு நேற்று அதி­பர் வரு­கை ­அளித்­தார்.

அப்­போது அவர் செய்­தி­யா­ளர் ­க­ளி­டம் பேசி­னார்.

"வீட்­டில் குண­ம­டை­வோ­ரின் கவ­லை­களை முழு­மை­யாக புரிந்­து ­கொள்ள முடி­கிறது," என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

"உங்­க­ளுக்­குத் தொற்று ஏற்­பட்­டால் உங்­க­ளுக்­காக மட்­டும் நீங்­கள் கவ­லைப்­பட மாட்­டீர்­கள். உங்­கள் குடும்ப உறுப்­பி­னர்­கள் குறித்­தும் நீங்­கள் கவ­லைப்­ப­டு­வீர்­கள். உங்­க­ளு­டைய கவ­லை­கள் நியா­யப் ப­டுத்­தக்கூடி­யது, என்­றா­லும் ஆலோ­சனை வழங்­கி­ய­படி நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­னால் கவ­லைப்­பட வேண்­டி­ய அவசியம் இல்லை. வீட்­டில் குண­ம­டை­வ­தற்கு நல்ல பரா­ம­ரிப்பு கட்­ட­மைப்பு நடப்பில் உள்ளது," என்று திரு­மதி ஹலிமா குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வீட்­டில் குண­ம­டை­யும் முன்­னோ­டித் திட்­ட­ம் அறி­மு­க­மா­னது. அது பின்­னர் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு இப்­போது வழக்­க­மான ஒன்­றா­கி­விட்­டது.

இந்­தத் திட்­டத்­தின் தொடக்­கத்­தில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து ஏராள­மான புகார்­கள் வந்­தன. பல பிரச்­சி­னை­களை எதிர்­நோக்க வேண்டி­யி­ருந்­தது.

சுகாதார அைமச்­சு­டன் தொடர்பு கொள்­வ­தில் சிலருக்கு சிர­மம் இருந்­தது. ஆனால் தற்­போது பெரும் பாலான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. மேலும் செப்டம்பர் 29ஆம் தேதி வீட்­டில் குண­ம­டை­தல் பணிக்­கு­ழுவை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் உரு­வாக்­கி­யது.

அக்­டோ­பர் முடி­வில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­க­ளைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 450 வீரர்­கள் இத்­திட்­டத்­தின் பல்­வேறு பணி­களில் ஈடு­ படுத்­தப்­பட்­ட­னர்.

இவர்­க­ளைத் தவிர அர­சாங்க தொழில்­நுட்ப முகவை, தற்­காப்பு அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்ப முகவை, மக்­கள் கழ­கம், ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு முகவை, பொதுச் சேவைப் பிரிவு உள்­ளிட்ட அமைப்­பு­களைச் சேர்ந்தவர்களும் கைெகாடுத்தனர்.

நேற்று அதி­பர் ஹலிமா யாக்­கோப், பணிக்­குழு உறுப்­பி­னர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார்.

குழு­வின் நேர­டித் தொலை­பே­சி தொடர்பை பரா­ம­ரிக்­கும் முழு நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளு­ட­னும் அவர் கலந்­துை­ர­யா­டி­னார்.

மருத்­து­வர்­க­ளி­டம் இணை­யம் வழி வழங்­கப்­படும் மருத்­துவச் சேவை­க­ளைப் பற்­றி­யும் அவர் அறிந்து­கொண்­டார்.

பொதுமக்கள் வீட்டில் குணமடை வதற்காக செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகளை அதிபர் ஹலிமா பார்வையிட்டார்.