வாராந்திர தொற்று விகிதம் 1.05க்கு குறைந்தது

வாராந்திர தொற்று விகிதம் 1.05க்கு குறைந்தது

1 mins read
1f16dd02-9c3b-42a0-80e7-fe27212b63b6
-

கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்டு 56 முதல் 95 வயது வரை­யி­லான 14 பேர் இறந்­து­விட்­ட­தாக திங்­கள்கிழமை அன்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவர்­களில் ஒரு­வர் மட்­டும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­வில்லை. அவ­ருக்கு இதர உடல் நலப் பிரச்சினைகளும் இருந்­தன.

திங்­கள்கிழமை நில­வ­ரப்­படி தொற்­றால் பாதிக்­கப்­பட்டு இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 421க்கு அதி­க­ரித்­துள்­ளது. அேத நாளில் 2,470 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இவற்­றில் 2,189 உள்­ளூர் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளா­கும். 278 பேர் தங்­கு­வி­டு­தி­ களில் பாதிக்­கப்­பட்­டவர்கள். மூவர் வெளி­நாட்­டில் இ­ருந்து வந்­த­வர்­கள்.

வாராந்­திர தொற்­று­வி­கி­தம் ஞாயிறு 1.12லிருந்து திங்­கள்­கி­ழமை 1.05க்கு குறைந்­தது. சிங்­கப்­பூ­ரில் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 200,844க்கு கூடி­யுள்­ளது.