கத்தியால் குத்திய தந்தை

கத்தியால் குத்திய தந்தை

2 mins read
25483c3a-bcc6-400b-bb0f-e2d9a417862d
-

மார்­சி­லிங் லேனில் இருக்­கும் ஒரு பேருந்து நிறுத்­தத்­தில் தன் மூத்த புதல்­வி­யைத் திரும்­பத் திரும்ப கத்­தி­யால் குத்­திய 65 வயது ஆட­வர், அந்­தப் புதல்வி மர­ண­ம­டை­ய­வில்லை என்­பது தெரிந்­த­தும் திரும்பி வந்து மீண்­டும் குத்­தி­னார்.

மனை­வியை இழந்த ஷூ ஆ சான் என்ற அந்த மலே­சிய லாரி ஓட்­டு­நர், திரு­வாட்டி ஷூ சுயட் லியன், 42, என்ற தனது மூத்த புதல்­வியை மார்பு, வயிறு, முதுகு, தோள்­பட்டை, கை ஆகிய இடங்­களில் மொத்­தம் 17 தடவை குத்­தி­னார்.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான அந்த மாதுக்கு நுரை­யீ­ரல்­கள் பாதிக்­கப்­பட்­டு­விட்­டன. இருந்­தா­லும் அவர் உயிர்­பி­ழைத்­து­விட்­டார்.

இந்­தச் சம்­ப­வம் சென்ற ஆண்டு நிகழ்ந்­தது.

கொலை செய்ய முயன்­ற­தா­கக் கூறும் ஒரு குற்­றச்­சாட்­டின் பேரில் நேற்று உயர் நீதி­மன்­றத்­தில் ஷு குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

பொது இடத்­தில் ஆபத்­தான ஆயு­தம் ஒன்றை வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­படும் இரண்­டா­வது குற்­றச்­சாட்டு, தண்­டனை விதிக்­கப்­படும் போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

ஷூவுக்கு வரும் வெள்­ளிக்­கி­ழமை தண்­டனை விதிக்­கப்­படும் என்று தெரி­கிறது.

ஷூவுக்கு மூன்று புதல்­வி­கள், இரண்டு புதல்­வர்­கள். பிள்­ளை­ க­ளோடு ஷூ அவ்­வ­ளவு பாசத்­தோடு இல்லை என்று நீதி­மன்­றத் ­தில் தெரிவிக்­கப்­பட்­டது.

ஜோகூர் பாரு­வில் இருக்­கும் ஒரு வீடு யாருக்கு சொந்­தம் என்­ப­தன் தொடர்­பில் பிள்­ளை­க­ளுக்­கும் அவ­ருக்­கும் இடையே பிரச்­சினை இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த வீட்டை வாங்க தான் பணம் கொடுத்­த­தாக ஷூ கூறி­னார். இருந்­தா­லும் அவ­ரு­டைய மூத்த மகன் சீ செங் தந்­தைக்­குப் பணம் கொடுத்­த­தா­க­வும் கடனை மகன் அடைத்து வந்­த­தா­க­வும் நீதிமன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2007ல் அந்த வீட்­டை­விட்டு வெளி­யே­றிய ஷூ மலாக்கா சென்று வேலை பார்த்­தார். அப்­போ­தைக்கு அப்­போது வீட்­டுக்கு அவர் திரும்பி வரு­வார்.

இதற்கிடையே வீட்டை புதுப்பித்து விற்க முயற்சிக்கப்ப டுவதாக ஷூ நம்பினார். இதற்கு மூத்த மகளே காரணம் என்று நினைத்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

ஜன­வரி 17ஆம் தேதி அதி­காலை மோட்­டார்­சைக்­கி­ளில் சிங்­கப்­பூர் வந்த அவர், திரு­வாட்டி ஷூ வசித்து வந்த மார்­சி­லிங் லேன் பகு­திக்­குச் சென்று எப்­ப­டி­யும் தன் மகள் வேலைக்­குச் செல்ல வெளியே வரு­வார் என்று காத்­தி­ருந்­தார்.

அதி­காலை சுமார் 5 மணிக்கு ஒரு பேருந்து நிலை­யத்தை நோக்கி திரு­வாட்டி ஷூ நடந்து சென்­ற­போது அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்று பல தடவை மகளைக் கத்­தி­யால் குத்­தி­விட்டு தன் மோட்­டார்­சைக்­கிளை நோக்கி ஓடி­னார். அப்­போது திரு­வாட்டி ஷூ சுயட் லியன் உத­விக்கு சத்தம் போட்­டார். தன் புதல்வி புல் தரை­யில் அமர்ந்து இருந்­த­தைக் கண்ட ஷூ, மோட்­டார்­ சைக்­கி­ளில் இருந்து கீழே இறங்கி ஓடி­வந்து, 'நீ இன்­ன­முமா சாக­வில்லை' என்று கேட்டு திரு­வாட்டி ஷூவை மீண்­டும் குத்­தி­விட்டு மோட்­டார்­சைக்­கி­ளில் ஓடி­விட்­டார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.