டிசம்பர் 26 முதல் பேருந்து, ரயில் கட்டணம் உயர்கிறது

பெரியவர்கள் பயணம் செய்ய 3 முதல் 4 காசு வரை கட்டணம் அதிகரிக்கும்

சிங்­கப்­பூ­ரில் பேருந்து, ரயில் கட்­ட­ணங்­கள் டிசம்­பர் 26ல் இருந்து 2.2 விழுக்­காடு கூடு­கிறது. பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் நேற்று இதனை அறி­வித்­தது.

அதா­வது பயண அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி பய­ணம் செய்­யும் பெரி­ய­வர்­க­ளுக்­கான கட்­ட­ணம் 3 முதல் 4 காசு­ கூடும். முதி­ய­வர்­கள், மாண­வர்­கள், உடற்­கு­றை­யா­ளர்­கள், குறைந்த வரு­மான ஊழி­யருக்கான சலு­கைக் கட்­ட­ணம் 1 காசு அதிகரிக்கும்.

ரொக்­கம் செலுத்தி பய­ணம் செய்­வது, ஒரு வழிப் பயணச்சீட்டு­கள், மாதாந்­திர சலுகை மற்­றும் பயண அட்­டை­க­ளுக்­கான கட்டணத்­தில் மாற்­றம் இருக்­காது என்­றும் மன்­றம் தெரி­வித்­தது.

எடுத்­துக்­காட்­டாக, செங்­காங்­கில் இருந்து ராஃபிள்ஸ் பிளே­சுக்கு 14.2 கி.மீ. செல்ல பெரி­ய­வர்­களுக் கான கட்­ட­ணம் 3 காசு கூடும்.

14.2 கி.மீட்­ட­ருக்­கும் அதிக தொலைவு பய­ணம் மேற்­கொள்­ளும் பெரி­ய­வர்­க­ளுக்­கான கட்­ட­ணம் 4 காசு­ அதி­க­ரிக்­கும்.

கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரர்­கள் சிர­ம­மான பொரு­ளி­யல் சூழ்­நி­லையை எதிர்­நோக்­கு­கி­றார்­கள் என்­றா­லும் இந்த ஆண்டு தனது கட்­டண மறு­ப­ரி­சீ­ல­னை­யில் மிக முக்­கி­ய­மான ஒன்றை கவ­னத்­தில் கொள்­ள­வேண்டி இருந்­த­தாக இந்த மன்­றம் தெரி­வித்­தது.

அதா­வது, சென்ற ஆண்டு பொதுப் போக்­கு­வ­ரத்­தில் மக்­கள் பய­ணம் செய்­தது, கொவிட்-19க்கு முன்பு இருந்த அள­வில் 25 விழுக்­காடு அள­வுக்கு மிக­வும் குறைந்து­விட்­டது என்­பதை அது சுட்­டிக்­காட்­டி­யது.

கட்­டண உயர்வைத் தள்ளிப் போட முடி­யாது என்­பதைப் பய­ணி­கள் உணர்ந்­து­கொள்ள வேண்­டும் என்று அந்த மன்­றத்­தின் தலை­வர் ரிச்­சர்ட் மேக்­னஸ் கேட்­டுக்­கொண்­டார். குறைந்த அள­வி­லான கட்­டண வரு­வாய், அதிக அள­வி­லான நடை­முறைச் செல­வு­கள் இருந்தால் நீண்­ட­கா­லத்­திற்கு நீடிக்க இய­லாது என்­றார் அவர்.

இத­னி­டையே, இந்த ஆண்டு மேலும் பல குடும்­பங்­கள் பொதுப் போக்­கு­வ­ரத்து பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சும் மக்­கள் கழ­க­மும் நேற்று தெரி­வித்­தன.

ஒரு­வ­ரின் மாத வரு­மா­னம் $1,600 அல்­லது அதற்­கும் குறை­வாக உள்ள குடும்­பங்­கள், அந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற இந்த ஆண்டு தகுதி பெறும்.

அந்­தப் பற்­றுச்­சீட்­டு­கள் மூலம் அவர்­கள் தங்­கள் கட்­டண அட்டை­களில் பணம் ஏற்­றிக் கொள்­ள­லாம். அல்­லது மாதச் சலுகை அட்டை­களை வாங்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!