துணிவோடு வாழ்வைத் தொடரும் தாதி

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

பத்­தாண்­டு­க­ளா­கத் தாதி­யாக இருக்­கும் 42 வயது தாதி கோ.கவிதா, தொழி­லில் பல சங்­க­ட­மான நிகழ்­வு­க­ளைப் பார்த்­த­வர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடங்­கிய நேரத்­தில் ஃபேரர் பார்க் மருத்­து­வ­ம­னை­யில் தாதி­யாக இருந்­தவர், அரு­கி­லி­ருக்­கும் ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த கிருமி தொற்­றி­ய­வர்களுக்கு பரா­மரிப்பு வழங்­கும் முன்­னிலை ஊழி­ய­ராக ஆறு மாதம் சேவை ஆற்­றி­னார்.

ஆகஸ்ட் மாதம் முதல் அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­மனை பொது மருந்­த­கப் பிரி­வில் மூத்­தோ­ரைக் கவ­னிக்­கும் மூத்த தாதி­யா­கப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி கவிதா, கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து மீண்­ட­வர்.

தொற்று ஏற்­பட்­டி­ருந்த காலத்­தில் மன­தைத் திட­மாக வைத்­தி­ருக்க முன்­க­ளப் பணி­யா­ள­ராக அவர் பணிபுரிந்தது கைகொடுத்தது போல, தொற்று ஏற்­பட்ட நேரடி அனு­ப­வம், மற்ற நோயா­ளி­க­ளுக்கு ஆறுதல்தர அவ­ருக்கு உத­வு­கிறது.

அந்­நே­ரம் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் உயிர் மருத்­து­வத் துறை­யில் பட்­ட­யக்­கல்­வியை முடித்த மகள் வை­தீஸ்­வரி சந்­திகா, மேற்­ப­டிப்­புக்­குத் திட்­ட­மிட்­டுக் கொண்­டி­ருந்­தார்.

கடந்­தாண்டு செப்­டம்­பர் மாதத்­தில் இந்­தி­யா­வில் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் பயில்­வது குறித்து ஆராய, மகள் வைதீஸ்­வ­ரி­யு­டன் சென்­னைக்கு சென்­றி­ருந்­தார் கவிதா. சிங்­கப்­பூ­ருக்கு அக்­டோ­பர் 12ஆம் தேதி திரும்­பி­ய­போது, 14 நாட்­கள் உள்­ளூர் ஹோட்­ட­லில் இவர்­கள் கிரு­மித்­தொற்­றுத் தடைக்­காப்பு நிபந்­த­னையை பூர்த்­தி­செய்ய வேண்­டி­யி­ருந்­தது. ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த 13வது நாளன்று கிருமிப் பரி­சோ­த­னை­யில் இரு­ வ­ருக்­கும் ­தொற்று உறு­தி­யா­னது.

"தீபா­வளி நேரம் பார்த்து கொவிட்-19 தொற்­றி­விட்­டதே என்ற வருத்­தம் இருந்தாலும் குண­ம­டைந்­து­வி­டு­வோம் என்ற நம்­பிக்­கை­யில் இருந்­தோம்," என்று கூறி­னார் தாதி கவிதா.

"இது நம்மை மட்­டும் பாதிக்­க­வில்லை, உல­கில் பல­ரை­யும் பாதித்­துள்­ளது, மீண்டு வரு­வ­தில் கவ­னம் செலுத்­து­வோம் என்ற நேர்­ம­றை­யான சிந்­தி­னைக்கு எங்­க­ளைப் பக்­கு­வப் படுத்­திக்­கொண்­டோம்," என்று நினை­வு­கூர்ந்­தார் 23 வயது வைதீஸ்­வரி.

அந்­நாள் இரவே தாயும் மகளும் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தில் அனு­ம­திக்­கப்­பட்டு இரண்டு வாரங்­க­ளுக்­கும் மேல் சிகிச்­சை பெற்­ற­னர்.

கடந்­தாண்டு தீபா­வ­ளிக்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்­னர் வைதீஸ்­வரி வீடு திரும்­பி­னார். அதற்கு மறு­நாள் தாயார் கவி­தா­வும் வீடு திரும்­பி­ய­தால் அனை­வ­ருக்­கும் மன நிம்­மதி.

நிச்­ச­ய­மற்ற சூழ­லைக் கடந்து, உயர்நிலைப் பள்­ளி­யில் பயி­லும் 14 வயது மகன் வைதேஷ்சரத்­து­டன் சேர்ந்து குடும்­ப­மாக தீபா­வ­ளி­யைக் கொண்­டாட முடிந்­தது, மன­திற்கு இத­மாக இருந்­தது.

"தீபாவ­ளிக்குத் தேவை­யா­ன பொருட்­கள் சில­வற்றை சென்­னை­யில் வாங்­கி­விட்­டோம். வீட்­டில் எல்­லோ­ரும் சேர்ந்து பல­கா­ரம் செய்­ய­மு­டி­யா­மல்­ போ­னதுதான் ஒரு சிறு குறை. 'ரோலர்-கோஸ்­டர்' போன்று மேலும் கீழும் அல்­லா­டிய மனதை நிலைப்படுத்­தும் வித­மாக கடந்­தாண்­டின் தீபா­வளி கொண்­டாட்­டம் அமைந்­தது," என்­றார் கவிதா.

வைதீஸ்­வரி இம்­மாத இறு­தி­யில், மருத்­து­வப் பட்­டப்­ப­டிப்­புக்­காக ஐரோப்பா செல்­ல­வி­ருக்­கி­றார். அதற்கு வேண்­டிய ஏற்­பா­டு­க­ளைச் செய்ய இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம்­ அ­வ­ரு­டன் ஐரோப்பா சென்­றி­ருந்­தார் கவிதா.

இவ்­வாண்டு தீபா­வளி, வழக்­கம் போல பல­வ­கைப் பல­கா­ரங்­களை வீட்­டில் தயா­ரிக்­க­வும் ஒன்­றாக தீபா­வளி ஆடை­களை வாங்­க­வும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது.

"கொவிட்-19 நிரந்­த­ர­மாக இங்கு இருக்­கப்­போ­வ­தில்லை. அத­னால் அதை நினைத்து மனச்­சோர்வு அடை­ய­வேண்­டாம் என்று மருத்­து­வ­ம­னைக்கு வரும் முதி­ய­வர்­களுக்குச் சொல்வேன். கொவிட்-19 கிருமி நம்­மி­டையே இருந்­தா­லும், வாழ்க்­கைப் பய­ணம் தொட­ரத்­தான் வேண்­டும்," எனக் குறிப்­பிட்­டார் இது­வும் கடந்து போகும் என கரு­தும் தாதி கவிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!