மேலும் 3,003 பேருக்கு கொவிட்-19; 17 பேர் மரணம்

கொவிட்-19 வாராந்­தி­ரத் தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 0.93ஆகக் குறைந்­தது. கடந்த புதன்­கி­ழமை அது 0.96ஆக இருந்­தது. இந்­தத் தக­வல்­களை சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டது.

தொடர்ந்து இரண்­டா­வது நாளாக இந்த விகி­தம் ஒன்­றுக்­குக் குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது. வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் ஒன்­றுக்­கும் அதி­க­மாக இருந்­தால் புதிய வாராந்­திர கொவிட்-19 பாதிப்­பு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தாக அர்த்­தம்.

இருப்­பி­னும், கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் மேலும் 17 பேர் மாண்­ட­னர். அவர்­கள் 55 வய­துக்­கும் 93 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். அவர்­கள் அனை­வ­ரும் ஏற்­கெ­னவே வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. ஆனால் அது குறித்து அமைச்சு கூடு­தல் விவ­ரங்­கள் வெளி­யி­ட­வில்லை.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் இது­வரை 459 பேர் கொவிட்-19 கார­ண­மாக மாண்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், மன­ந­லக் கழ­கத்­தில் உரு­வா­கி­யுள்ள கொவிட்-19 குழு­மம் 294 பேரி­லி­ருந்து 338ஆக அதி­க­ரித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 317 பேர் நோயா­ளி­கள், 21 பேர் ஊழி­யர்­கள். இதுவே சுகா­தார அமைச்சு உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரும் ஆகப் பெரிய கொவிட்-19 குழு­மம்.

தேவைப்­பட்­டால் கடு­மை­யான கொவிட்-19 அறி­கு­றி­கள் கொண்ட நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­வர் என்று மன­ந­லக் கழ­கம் நேற்று முன்­

தி­னம் தெரி­வித்­தது. கடந்த புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி ஏறத்­தாழ 40 பேர் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் மேலும் 3,003 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் 2,780 சமூக அள­வில் பாதிப்­ப­டைந்­த­னர். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­களில் 220 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. வெளி­நா­டு­

க­ளி­லி­ருந்து வந்த மூவ­ருக்கு கொவிட்-19 இருப்­பது தெரி­ய­வந்­தது.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 471 பேர் 60 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 210,978ஆக அதி­க­ரித்­துள்­ளது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 1,683 பேர் மருத்­து­வ­ம­னை­யில் உள்­ள­னர். அவர்­களில் 286 பேருக்கு உயிர்­வா­யுக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.

66 பேரின் உடல்­நிலை சீரற்று இருப்­ப­தா­க­வும் அவர்­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்­சைப் பெற்று வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!