சில்லறை வர்த்தகம் கூடியது; செப்டம்பரில் 6.6% உயர்வு

2 mins read
9dbb63b8-0119-4d18-a158-f2e1d0fb6495
-

சிங்­கப்­பூ­ரின் சில்­லறை வர்த்­த­கம் ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த செப்­டம்­ப­ரில் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட வலு­வாக மீட்சி அடைந்­தது.

புதிய கைபே­சி­கள் சந்­தைக்கு வந்­ததும் பெரும்­பா­லான தொழில்­துறைகள் மேம்பட்ட நிலைக்­குத் திரும்பி­ய­தும் அதற்கு முக்­கிய காரணங்­களாக இருந்­தன.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­படை­யில், செப்­டம்­ப­ரில் சில்­லறை வர்த்­த­கம் 6.6% அதிக­ரித்­தது. அந்த வர்த்­த­கம் கடந்த ஆகஸ்ட்­டில் 2.8% சரிந்து இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. சிங்­கப்­பூர் புள்­ளி­வி­வ­ரத் துறை வெளி­யிட்ட தக­வல்­கள் மூலம் இவை தெரி­ய­வந்­தன.

கடு­மை­யான கொவிட்-19 நட­வடிக்­கைகள் நடப்­பில் இருந்த சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், ஆகஸ்ட்டிற்கு முந்­தைய ஆறு மாத காலத்­தில் சில்­லறை வர்த்­த­கம் ஏறு­மு­க­மாக இருந்து வந்­தது. அதை­ய­டுத்து ஆகஸ்ட்­டில் சில்லறை வர்த்­த­கம் குறைந்­தது.

புளூம்­பெர்க் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் கலந்­து­கொண்ட பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள், செப்­டம்­ப­ரில் சில்­லறை வர்த்­த­கம் 2.2%தான் கூடும் என்று கணித்து இருந்­தார்­கள். ஆனால் நிலவரம் அதற்­கும் மேலா­க மேம்பட்டது.

சில்­லறை வர்த்­தகத் தொழில் துறை­யில் தொலைத் தொடர்பு சாதனத் துறை விற்­ப­னை­தான் ஆக அதிக வளர்ச்சி கண்­டது. ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் அது 66.1% கூடி­யது.

புதிய கைபே­சி­கள் வெளி­யி­டப்­பட்­டது இதற்­கான முக்­கிய கார­ண­மாக இருந்­தது.

நகை­க­ளுக்­கான தேவை அதி­க­மாக இருந்­தது. பெட்­ரோல் விலை அதி­க­மா­கி­யது. இவை கார­ண­மாக பெட்­ரோல் நிலை­யம், கடி­கா­ரங்­கள், நகை தொழில்­து­றை­யில் விற்­பனை அதி­க­ரித்­தது.

மோட்­டார் வாக­னங்­களைச் சேர்க்­கா­மல், மொத்த சில்­லறை வர்த்­த­கம் 8.3% மேம்­பட்­டதாகத் தெரிய வந்துள்ளது. செப்­டம்­ப­ரில் மொத்த சில்­லறை வர்த்­த­கத்­தின் மதிப்பு $3.4 பில்­லி­யனாக இருக்கும் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

அதில் ஏறக்­கு­றைய 15.2% இணை­யம் வழி நடந்த வர்த்­த­கம்.

இணை­யம் வழி வர்த்­த­கமும் ஆகஸ்ட் அள­வை­விட (14.1%) செப்­டம்­ப­ரில் அதி­கம். இணை­யம் வழி நடந்த வர்த்­த­கத்தில் 53.7%, கணினி­கள், தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­க­ளாக இருந்­தன.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்படை­யில் உணவு, பானத் துறை சில்­லறை வர்த்­த­கம் செப்­டம்­ப­ரில் 4.4% அதி­க­ரித்­தது.

இந்­தத் துறை­யின் மொத்த வர்த்­த­க மதிப்பு செப்­டம்­ப­ரில் $669 மில்­லி­யன் என்­ப­தும் அந்­தப் புள்ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரிய வந்­துள்­ளது.