34வது மாடி வீட்டில் சம்பவம்: எண்ணெய் விளக்கில் இருந்து தீ மூண்டு இருக்கலாம்

கேன்டோன்­மண்ட் ரோட்­டில் உள்ள பின்­னக்­கல்@டக்ஸ்­டன் புளோக்­கில் இருக்­கும் வீடு ஒன்­றில் வியாழக்­கி­ழமை தீ மூண்­டது.

அந்த வீட்­டில் உள்ள வழி­பாட்டு இடத்­தில் எரிந்­து­கொண்­டி­ருந்த எண்­ணெய் விளக்­கில் இருந்து அந்­தத் தீ மூண்டு இருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தது.

அந்த புளோக்­கின் 34வது மாடி­யில் இருக்­கும் வீட்­டில் தீ மூண்டது பற்றி தக­வல் கிடைத்­த­தும் அன்று இரவு 8.35 மணிக்கு இந்­தப் படை அங்கு விரைந்­தது.

தீய­ணைப்­பா­ளர்­கள் அந்த வீட்டிற்­குள் பரவி இருந்த தீயை அணைத்­த­னர். தீ மூண்­ட­போது வீட்­டில் யாரும் இல்லை என்று குடி­மைத் தற்­காப்­புப் படை கூறியது.

வழி­பாட்டு இடத்­தில் எண்­ணெய் விளக்கு எரிந்து கொண்­டி­ருந்த நிலை­யில் வீட்­டில் இருந்­த­வர்­கள் வெளியே சென்­று­விட்­ட­தாக முதல்­கட்ட புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

தீ மூண்­ட­தன் கார­ண­மாக அந்த வீட்­டில் புகை­யும் வெப்­ப­மும் சூழ்ந்து இருந்­தது. யாருக்­கும் பாதிப்பு இல்லை. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக பக்­கத்து வீடு­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 40 பேர் அப்­புறப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

எண்­ணெய்­ விளக்கு­களை எரிந்து கொண்­டி­ருக்­கும் நிலை­யில் அப்­ப­டியே எரி­ய­விட்டுவிட்டு வெளியே செல்ல வேண்­டாம் என்றும் அவற்றை அணைத்து­விட்டு வெளியே செல்­லு­மா­றும் மக்­க­ளுக்கு தற்காப்புப் படை நினை­வூட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!