மகளை கத்தியால் குத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை

2 mins read
5ae489eb-fb40-4ced-a230-d4f524bfb73d
-

மார்­சி­லிங் லேனில் இருக்­கும் ஒரு பேருந்து நிறுத்­தத்­தில் தன் மூத்த புதல்­வி­யைத் திரும்­பத் திரும்ப கத்­தி­யால் குத்­திய 65 வயது ஆட­வர், புதல்வி மர­ண­மடை­ய­வில்லை என்­பது தெரிந்­த­தும் திரும்பி வந்து மீண்­டும் குத்­தி­னார்.

மனை­வியை இழந்த ஷோ ஆ சான் என்ற அந்த மலே­சிய லாரி ஓட்­டு­நர், கொலை செய்ய முயன்­ற­தா­கக் கூறும் குற்­றத்தைச் செவ்­வாய்க்­கி­ழமை ஒப்­புக்­கொண்­டார்.

அவ­ருக்கு நேற்று 15 ஆண்டு­கள் சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்­டது. குற்­ற­வா­ளிக்கு 10 முதல் 16 ஆண்­டு­கள் சிறைத்தண்­ட­னை விதிக்­க­வேண்டும் என்று அர­சி­னர் தரப்பு வாதிட்­டது. 10 ஆண்டு கள் சிறைத்தண்­டனை போது மானது என்று தற்­காப்­புத் தரப்பு கேட்­டுக்­கொண்­டது.

அந்தத் தந்தை, திரு­வாட்டி ஷோ சுயட் லியான், 42, என்ற தனது மூத்த புதல்­வியை மார்பு, வயிறு, முதுகு, தோள்­பட்டை, கை ஆகிய இடங்­களில் மொத்­தம் 17 தடவை குத்­தி­னார். சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான அந்த மாதுக்கு நுரை­யீ­ரல்­கள் பாதிக்­கப்­பட்­டன.

இருந்­தா­லும் அவர் உயிர்­பிழைத்துவிட்­டார். இத்­த­கைய தாக்­கு­த­லுக்குக் கடும் தண்­டனை தேவை என்று வழக்கை விசாரித்த உயர்­ நீ­தி­மன்ற நீதி­பதி கூறினார்.

அந்த மாது ஒரு தடவை அல்ல பல­முறை தாக்­கப்­பட்­டார். சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அந்த வழியே சென்­ற­வர்­கள் முன்­னி­லை­யில் திரும்பி வந்­தும் அந்­தப் பெண்ணை அந்த ஆட­வர் தாக்­கி­னார் என்­பதை நீதி­பதி தீர்ப்­பில் சுட்­டிக்­காட்­டி­னார். தற்­காப்புத் தரப்பு வாதத்தை நீதி­பதி நிரா­க­ரித்தார்.

கத்திக் குத்து சம்­ப­வம் சென்ற ஆண்டு நிகழ்ந்தது. ஷோவுக்கு மூன்று புதல்­வி­கள், இரண்டு புதல்­வர்­கள். பிள்­ளை­க­ளோடு ஷோ அவ்­வ­ளவு பாசத்­தோடு இல்லை என்று நீதி­மன்­றத்­தில் தெரிவிக்­கப்­பட்­டது.

ஜோகூர் பாரு­வில் இருக்­கும் ஒரு வீடு யாருக்கு சொந்­தம் என்­ப­தன் தொடர்­பில் பிள்­ளை­களுக்­கும் அவ­ருக்­கும் பிரச்­சினை இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பிரச்­சினை எழு­வ­தைத் தடுப்­பதற்­காக அந்த வீட்­டைப் புதுப்­பித்து அதை விற்­று­வி­ட­லாம் என்று ஷோவின் பிள்­ளை­கள் முடி­வு­செய்­த­னர்.

புதுப்­பிக்­கப்­பட்ட வீட்­டைப் பார்த்­த­தும் ஷோ மன­மு­டைந்­து­போ­னார். வீடு விற்­கப்­பட்­டு­விட்டது என்று அனு­மா­னித்­துக்­கொண்­டார்.

தன் மூத்த புதல்வி திரு­வாட்டி ஷோதான் இதற்­கெல்­லாம் கார­ணம் என்று நம்­பிய தந்தை, மகளைக் கொலை செய்­வது பற்றி சிந்­திக்­கத் தொடங்­கி, சென்ற ஆண்டு ஜன­வரி 16ஆம் தேதி தன் திட்­டத்தை நிறை­வேற்ற முடிவு­செய்­தார்.

ஜன­வரி 17ஆம் தேதி அதி­காலை மோட்­டார்­சைக்­கி­ளில் சிங்­கப்­பூர் வந்த அவர், திரு­வாட்டி ஷோ வசித்து வந்த மார்­சி­லிங் லேன் பகு­தியில் திரு­வாட்டி ஷோ நடந்து சென்­ற­போது அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்று பல முறை அவ­ரை கத்­தி­யால் குத்­தி­னார்.

தன் புதல்வி சாகவில்லை என்பது தெரிந்ததும் திரும்பி வந்து, 'நீ இன்­ன­முமா சாக­வில்லை' என்று கேட்டு திரு­வாட்டி ஷோவை மீண்­டும் குத்­தி­விட்டு அவர் ஓடி­விட்­டதாக விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.