சீனாவின் வலுவான பொருளியல், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கு வதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
சீனப் பொருளியல் வலுவாக மீண்டு வருகிறது. உள்நாட்டுப் பயனீட்டை ஊக்குவிக்க சீனா கடப்பாடு தெரிவித்துள்ளது. பயனீட்டாளர் செலவினத்தை அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று திரு கான் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-சீனா வர்த்தக முதலீட்டுக் கருத்தரங்கம் நான்காவது ஆண்டாக இந்த ஆண்டு ஷங்காய் நகரில் ஆறு நாட்கள் நடக்கிறது.
சிங்கப்பூரில் இருந்து ஸூம் வழியாக காணொளியில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் திரு கான், சிங்கப்பூரின் தயாரிப்புப் பொருட்கள் உயர்தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்குப் பெரிதும் பெயர்பெற்றவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.