தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மசகோஸ்: இன, சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியான நாடு சிங்கப்பூர்

2 mins read
8ba5f562-2709-4fd6-b59c-628078b211f7
-

இன, சமய நல்­லி­ணக்­கத்­திற்கு முன்­மா­தி­ரி­யாக சிங்­கப்­பூர் திகழ முடி­யும் என்று முஸ்­லிம் விவ­காரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மசகோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர், உல­கி­லேயே ஆக அதிக பன்­மயச் சமூக நாடு­களில் ஒன்­றாக இருக்­கிறது என்­ப­தை­யும் அதன் குடி­மக்­கள் அனை­வ­ரும் ஒரே மக்­க­ளாகத் திகழ உறுதி தெரி­வித்து இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் இதன்­தொ­டர்­பில் அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரு­மான திரு மச­கோஸ், முஸ்­லிம் சமூ­கங்­கள் பற்­றிய மெய்­நி­கர் ஆய்­வ­ரங்கு ஒன்­றில் உரை­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் ஏற்­பாடு செய்த அந்த ஆய்­வ­ரங்­கில் சிங்­கப்­பூ­ரர்­களும் வெளி­நாட்­டி­ன­ரும் கலந்­து­கொண்­ட­னர். மதச்­சார்­பற்ற நாடு­களில் நிலவும் திறந்த, நவீன, பன்­மயச் சமூ­கங்­களில் பல முஸ்­லிம் சிறு­பான்மைச் சமூ­கத்­தி­னர் வாழ்­கிறார்­கள் என்­பதை அவர் சுட்­டி­னார்.

அத்­த­கைய சமூ­கத்­தி­ன­ரின் அனு­ப­வங்­கள், முஸ்­லிம்­கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழக்­கூ­டிய சமூ­கங்­க­ளின் அனு­பவத்­தில் இருந்து திட்­ட­வட்­ட­மாக வேறு­பட்டு இருக்­கும் என்று தெரி­வித்தார்.

அத்­த­கைய முஸ்­லிம் சிறு­பான்மைச் சமூ­கத்­தி­னர், சிங்­கப்­பூர் முஸ்­லிம்­களைப் போலவே, தங்­கள் சம­யத்­தைப் பின்­பற்­றும் அதே­வேளை­யில், நாட்டு நிர்­மா­ணத்­திற்­குத் தொண்டு செய்­யும் ஆற்­ற­லை­யும் பெற்­றி­ருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்திக் கூறி­னார். சிங்­கப்­பூர் அமை­தி­யை­யும் நிலைப்­பாட்­டை­யும் அனு­ப­வித்து வரு­வ­தற்கு வகை­செய்­யும் மூன்று ஆதார தூண்­கள் பற்­றி­யும் அவர் குறிப்­பிட்­டார்.

நீதி, சமத்­து­வம் என்­பது அந்த மூன்று தூண்­களில் ஒன்று என்று குறிப்­பிட்ட திரு மச­கோஸ், சுய­சார்பு என்­பது மற்­றொரு தூண் என்­றார். சிங்­கப்­பூர் பிணைப்­பு­மிக்க, நல்­லி­ணக்­க­மிக்க சமூ­க­மாக இருப்­பது மூன்­றா­வது தூண் என்று அவர் வர்­ணித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பல ஆண்­டு­கா­ல­மாக இன, சமய நல்­லி­ணக்­கம் நிலவி வரு­கிறது என்­ப­தைச் சுட்டிய அமைச்­சர், இருந்­தா­லும் அதைக் கிள்ளுக்­கீரை­யா­கக் கரு­தா­மல் நல்லி­ணக்­கத்­தைப் பேணி பலப்­படுத்த சமூ­கத்­தைச் சேர்ந்த அனைத்துக் குழு­வி­ன­ரும் தொடர்ந்து பாடு­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.