'டிசம்பர் 8 முதல் மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்'

'டிசம்பர் 8 முதல் மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்'

2 mins read
7b5d989e-eb0e-452b-9366-a85d4ccce4f7
அண்மையில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை வளாகங்கள் உட்பட சிகிச்சை நிலையங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்களுக்கு புதிய சுமை

தடுப்­பூசி போட விருப்­பம் இல்­லா­த­வர்­கள், கிருமித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டால் அதற்­கு­ரிய மருத்­துவச் செல­வு­களை அவர்­களே ஏற்க வேண்­டும்.

வரும் டிசம்­பர் 8ஆம் தேதி­யில்­ இ­ருந்து இந்தப் புதிய நடைமுறை அம­லுக்கு வரு­கிறது.

இதனை நேற்று அறி­வித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், தடுப்­பூசி போட வேண்­டிய அவ­சி­யத்தை உணர்த்­தி­யி­ருக்­கி­றார்.

கொவிட்-19 சூழ­லைச் சமா­ளித்து வரும் அமைச்­சு­க­ளுக்கு இடை­யி­லான பணிக் குழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அதன் இணை­த் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு ஓங், தடுப்­பூசி போட்­டுக்கொள்ள தகு­தி­யுடையோர் அனை­வ­ரும் தடுப்பூசி போட்­டுக் கொள்ள வேண்­டும் என்று வலி­யுறுத்தி­னார்.

"தடுப்­பூசி போட விருப்­ப­மில்­லா­த­வர்­க­ளுக்கு மருத்­து­வச் செலவு ­கள் இருக்க வேண்­டாம் என்­பதே விருப்பம். ஆனால் தீவிர சிகிச்சை தேவைப்­ப­டு­வோ­ரில் தடுப்­பூசி போடா­த­வர்­கள் பெரும்­பங்கு வகிப் ­ப­தா­லும் சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வளங்­கள் பாதிக்­கப்­படு­ வ­தா­லும் இந்த மாற்­றம் செய்யப்­ ப­டு­கிறது," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

தற்­போது சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் மற்­றும் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பி­ய­தும் நோய்த்தொற்று இருப்­பது உறுதி செய்யப்பட்­ட­வர்­க­ளைத் தவிர மற்­ற­வர்­க­ளுக்­கும் கொவிட்-19 செலவு­களை அர­சாங்­கம் முழு­மை­யாக ஏற்­று வருகிறது.

புதிய மாற்­றத்­தின்­படி தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகு­தி­யி­ருந்­தும் போடா­த­வர்­கள் வரும் டிசம்­பர் 8ஆம் தேதி­யி­லி­ருந்து கொவிட்-19 சிகிச்­சைக்­கான செல­வு­களை ஏற்க வேண்­டி­யி­ருக்­கும்.

"இருந்­தா­லும் தற்­போது வழங்­கப்­பட்­டு­வ­ரும் கழி­வு­களை மருத்­து­வக் கட்­ட­ணங்­கள் உள்­ள­டக்­கி­யி­ருக்­கும். மெடி­சேவ் பயன்­பாடு மற்­றும் மெடி­ஷீல்ட் லைஃப் கோரிக்­கை­க­ளைப் பொருத்து செல­வு­கள் இருக்­கும். இத­னால் அர­சாங்­கத்­தின் ஆத­ர­வும் கட்­ட­ணச் சலு­கை­களும் தொட­ரும்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அதே சம­யத்­தில் மருத்­துவக் கார­ணங்­க­ளால் தடுப்­பூசி போட முடி­யா­த­வர்­கள், 12 வய­துக்­குக் கீழ் உள்ள தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெறா­த­வர்­க­ளின் கொவிட்-19 மருத்­து­வச் செல­வு­களை அர­சாங்­கம் பார்த்­துக் கொள்­ளும்.

கொவிட்-19 தொற்று முன்­பின் அறி­மு­க­மில்­லா­தது. இத­னால் பாதிக்­கப்­படும் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள், அண்­மை­யில் வெளி­நாடு செல்­லா­த­வர்­க­ளைத் தவிர அனை­வ­ருக்­கும் நிதிச் சுமையைக் குறைக்­கும் நோக்­க­தோடு செல­வு­களை அர­சாங்­கம் ஏற்றது என்று பணிக்­குழு நேற்று தெரி­வித்­தது.

கொள்­ளை­நோய் சூழல் மேம்­படும்வரை தடுப்­பூசி போட்­டுக் கொண்டுள்ள பொது­மக்­களில் பெரும்­பா­லோ­ரின் கொவிட்-19 மருத்­து­வக் கட்­ட­ணங்­களை அர­சாங்­கம் தொடர்ந்து ஏற்றுக்கொள்­ளும் என்­றும் குழு கூறி­யது.

இதற்­கி­டையே முழு­மைாகத் தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளாத தனி ­ந­பர்­க­ளுக்கு டிசம்­பர் 31ஆம் தேதி வரை மருத்­து­வக் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்படாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதாவது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மற்றொரு வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படு கிறது.