இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

இந்­தோ­னீ­சியா, வியட்­னாம், தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­ க­ளின் பய­ணி­கள் இம்­மா­தம் 11ஆம் தேதி­யி­லி­ருந்து கூடு­தல் எல்­லைக் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­க­ளைக் காண்பார்­கள் என்று சிங்­கப்­பூர் நேற்று தெரி­வித்­தது.

இந்த நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர் சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­ப­டு ­வ­தற்கு முன்பு எடுக்­கப்­பட்ட ஏஆர்டி பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்ற சான்­றைக் காண்­பித்­தால் போதுமானது. 'ஆர்டி-பிசி­ஆர்' சோதனை முடி­வைக் காட்ட வேண்­டும் என்று முன்­பி­ருந்து விதி ­முறைக்கு மாற்­றாக இந்­தப் புதிய முறை அமை­கிறது.

முன்பு சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தால் அறி­விக்­கப்­பட்ட அதிகமான கொவிட்-19 கிரு­மித்­தொற்று உள்ள பட்­டி­ய­லில் இருந்த 23 நாடு­க­ளுக்­கும் இந்த எல்­லைக் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­தப் பட்­டி­ய­லில் இந்­தியா, லாவோஸ் போன்ற நாடு­கள் இருந்­தன.

இம்­மா­தம் 11ஆம் தேதி­யி­லி­ருந்து இந்த நாடு­க­ளின் பய­ணி­கள் சிங்கப்பூரில் தங்­களுடைய இல்லத்­தில் அல்­லது தங்­க­ளுக்கு விருப்­ப­மான ஹோட்­ட­லில் 10 நாள் தனி­மை­யில் இருக்க வேண்­டும். தற்­போது உள்ள விதி­க­ளின்­படி அவர்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்ட தனி­மைப் ­ப­டுத்தும் இடத்­தில் தங்க வேண்­டும். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான சிறப்­புப் பய­ணத் தடத் திட்­டத்­தில் இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து சுவீ­ட­னும் ஃபின் லாந்­தும் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. இவ்­விரு நாடு­களும் சிங்­கப்­பூர் பயணி­கள் தங்­கள் நாட்­டுக்­குள் வர அனு ­ம­தித்­துள்­ளன.

அவற்­று­டன் மலே­சி­யா­வும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான சிறப்­புப் பய­ணத் தடத் திட்­டத்­தில் சேர்த்­துக்­கொள்ளப்­பட்­டி­ருப்­ப­தால், சிங்­கப்பூருக்­குள் நாள்­தோ­றும் வரும் பய­ணி­க­ளின் வரம்பு 6,000க்கு உயர்ந்­துள்­ளது.

எல்­லைக்­கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தைப் பற்றி பேசிய போக்கு­வரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டோ­ருக்­கான சிறப்புத் தடம் நம்­பிக்­கை­ய­ளித்­துள்­ள­தால் மேலும் பல நாடு­க­ளுக்கு விரி­வுப­டுத்­தப் ­ப­டுவதாக தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!