செயற்கை நுண்ணறிவுக்கு அதிக முக்கியத்துவம்

செயற்கை நுண்ணறிவுக்கு அதிக முக்கியத்துவம்

3 mins read
6f0f7da4-7ec5-4504-92b2-3760966af621
-

செயற்கை நுண்­ண­றி­வைக் கொண்டு சிங்­கப்­பூ­ரில் சுகா­தார அறி­வி­யல் புத்­தாக்­கத்தை மேம்­

ப­டுத்த சிங்­ஹெல்த் அமைப்­பும் எஸ்­ஜி­இன்­னோ­வேட் அமைப்­பும் மூன்று ஆண்டு பங்­கா­ளித்­துவ ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இந்த ஒப்­பந்­தம் குறித்து நேற்று காலை அறி­விக்­கப்­பட்­டது.

செயற்கை நுண்­ண­றி­வுப் பயன்­பாட்­டை­யும் அதன் மேம்­பாட்­டை­யும் அதி­க­ரிக்க இந்­தப் பங்­கா­ளித்­து­வம் இலக்கு கொண்­டுள்­ளது.

பரிசோ­தனை, சிகிச்சை முறை ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தி­லும் இந்­தப் பங்­கா­ளித்­து­வம் மும்­மு­ரம் காட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவையை மேம்­ப­டுத்­தும் நோக்­கி­லும் இந்த முயற்சி மேள்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பான புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் இரு­த­ரப்­பி­ன­ரும் கையெ­ழுத்­தி­டு­வதை காணொளி மூலம் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று பார்வையிட்டார்

"அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான தனி­யார் அமைப்­பான எஸ்ஜி­ இன்­னோ­வேட் அறி­வி­யல் ஆய்­வு­களை தொழில்­நுட்­பப் பயன்­பா­டு­க­ளாக மாற்றி அமைக்­கிறது. சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழைய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­ய­மான சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னையை சிங்­ஹெல்த் அமைப்பு நிர்­வ­கிக்­கிறது," என்று நேற்று நடத்­தப்­பட்ட மெய்­நி­கர் நிகழ்­வில் அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் செயற்கை நுண்­ண­றி­வின் பயன்­பாடு குறித்து அமைச்­சர் ஓங் உரை­யாற்­றி­னார். சேட்­போட் டாக்­டர் கொவிட் எனும் செயற்கை நுண்­ண­றிவு உரை­யா­டல் முறையை அவர் உதா­ரா­ணம் காட்­டி­னார். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் அவர்­க­ளது தாய்­மொ­ழி­யில் அந்­தச் செயற்கை நுண்­ண­றி­வுத் தளம் பேசு­வதை அவர் சுட்­டி­னார். இதன்­மூ­லம் சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் உடல், மனநல­னைச் சிறப்­பான முறை­யில் கண்­கா­ணிக்க முடி­வ­தாக திரு ஓங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் தீவிர மருத்­துவ மற்­றும் ஆய்­வுத் திறன்­கள், மருந்­தி­யல் மற்­றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் புத்­தாக்க நிபு­ணர்­கள், எஸ்­ஜி­இன்­னோ­வேட்­டின் ஆழ்ந்த தொழில்­நுட்ப நிபு­ணத்­து­வ­மும் பல­த­ரப்­பட்ட பிரி­வு­களும் சுகா­தார அறி­வி­யல் புத்­தாக்­கத்­தின் ஆற்­றல் வளத்தை அதி­க­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. செயற்கை நுண்­ண­றி­வில் புதிய பங்­கா­ளித்­து­வம் கவ­னம் செலுத்­து­கிறது.

"பரி­சோ­தனை முறை­க­ளின் துல்­லி­யத்தை மேம்­ப­டுத்­த­வும் தனிப்­பட்­ட­ மு­றை­யி­லான சிகிச்­சை­க­ளின் நெறி­மு­றை­களை மேம்­ப­டுத்­த­வும் தொழிலாளர் வளங்­களை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­த­வும் தர­வு­கள், பகுப்­பாய்வு, அபா­யங்­களை முன்­கூட்­டியே முன்­னு­ரைக்­கும் மாதி­ரி­கள் ஆகி­ய­வற்­றில் கூடு­தல் திட்­டங்­களை எதிர்­பார்க்­கி­றோம்," என்று சிங்­ஹெல்த் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி பேரா­சி­ரி­யர் ஐவி இங் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய அணு­கு­மு­றை

­யு­டன் ஒப்­பி­டும்­போது நோயா­ளி­

க­ளுக்கு செயற்கை நுண்­ண­றிவு அணு­கு­முறை துல்­லி­ய­மான பரி­சோ­தனை முடி­வு­க­ளைக் காட்ட வேண்­டும் என்று எஸ்­ஜி­இன்­னோ­வேட் அமைப்­பின் தலைமை நிர்­வா­கி­யான டாக்­டர் லிம் ஜியூ செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

அது­மட்­டு­மல்­லா­மல், செயற்கை நுண்­ண­றிவு பரி­சோ­தனை முறை­யின் கட்­ட­ணம் தற்­போ­தைய பரி­சோ­தனை முறை­யைப் போன்று அல்­லது அதற்­குக் குறை­வாக இருக்க வேண்­டும் என அவர் தெரி­வித்­தார்.

புதிய பங்­கா­ளித்­து­வத்­தால் புதிய அத்­தி­யா­யம் தொடங்­கி­யி­ருப்­ப­தாக டாக்­டர் லிம் கூறி­னார். இதற்கு முன்பு இத்­த­கைய உயர்­நி­லை­யில் இது­போன்ற பங்­கா­ளித்­து­வம் ஏற்­பட்­ட­தில்லை என்­றார் அவர். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் புத்­தாக்­கத் துறை­களில் செயற்கை நுண்­ண­றி­வுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் தலை­மைத்­து­வத்தை அமைப்­ப­தில் புதிய பங்­கா­ளித்­து­வம் கவ­னம் செலுத்­தும்.

சிங்­ஹெல்த்­தின் மருந்­தி­யல் மற்­றும் புத்­தாக்க நிபு­ணர்­களும் எஸ்ஜி இன்­னோ­வேட் அமைப்­பில் அர­சாங்க, தனி­யார் துறை­க­ளைச் சேர்ந்த பங்­கா­ளி­க­ளை­யும் அடிக்­கடி ஒன்­றி­ணைந்து செயல்­பட ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்ட இரு அமைப்­பு­களும் தேவை­யான ஏற்­பா­டு­க­ளைச் செய்­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

செயற்கை நுண்­ண­றிவு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த ஒவ்­வொரு காலாண்­டி­லும் செயற்கை நுண்­ண­றிவு மற்­றும் மின்­னி­லக்­கப் புத்­தாக்­கம் தொடர்­பான நிகழ்­வு­கள் நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, துறை சார்ந்த பங்­கா­ளி­க­ளுக்­குத் தேவை­யான திறன்­க­ளைக் கற்­றுத்­த­ரும் நோக்­கில் செயற்கை நுண்­ண­றிவை மைய­மா­கக் கொண்ட சுகா­தா­ரப் பயி­ல­ரங்கு ஆண்­டுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.