பயணத் தடை நீக்கப்பட வேண்டிய பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நீக்கம்

1 mins read
424cfbd3-d687-40ee-b399-941af5833987
-

பய­ணத் தடை நீக்­கப்­பட வேண்­டிய நாடு­க­ளின் பட்­டி­ய­லிலி­ருந்து சிங்­கப்­பூரை ஐரோப்­பிய ஒன்­றி­யம் நீக்­கி­யுள்­ளது.

இதன் விளை­வாக ஆண்­டு­ இறுதியில் ஐரோப்­பா­வுக்­குப் பய­ணம் செய்­யத் திட்­ட­மிட்­டி­ருந்த சிங்­கப்­பூ­ரர்­க­ள் ஏமாற்­றம் அடையக் கூடும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரும் பயணி­க­ளுக்கு ஐரோப்பிய ஒன்­றிய உறுப்­பிய நாடு­கள் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதிக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது. பய­ணத் தடை நீக்­கப்­பட வேண்­டிய நாடு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரு­டன் உக்­ரே­னை­யும் ஐரோப்­பிய ஒன்­றிய மன்­றம் நேற்று நீக்­கி­யது.

ஒவ்­வொரு இரண்டு வாரங்­க­ளுக்கு இப்­பட்­டி­யல் மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­கி­றது. கடந்த மாத இறு­தி­யில் பட்­டி­யல் மறு­ஆய்வு செய்­யப்­பட்­ட­போது சிங்­கப்­பூர் அதில் இடம்­பெற்­றி­ருந்­தது.

"அந்­தந்த நாடு­களில் உள்ள கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரம், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக அங்கு எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­கள், வழங்­கப்­படும் தக­வல்­கள், தர­வு­கள் ஆகி­ய­வற்­றின் நம்­ப­கத்­தன்­மை­யைக் கருத்­தில் கொண்டு பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் நாடு­கள் குறித்து முடி­வெ­டுக்­கப்­படும்," என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் தெரி­வித்­தது.

மன்­றம் பரிந்­து­ரை­களை முன்­வைத்­தா­லும் அவற்றை நடை­

மு­றைப்­ப­டுத்­து­வது உறுப்­பிய நாடுகளுடைய அர­சாங்­கங்­க­ளின் பொறுப்­பா­கும்.

புதிய பரிந்­து­ரை­யால் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைச் சேர்ந்த 27 உறுப்­பிய நாடு­களும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­குக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதிக்­கும் சாத்­தி­யம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் பரிந்­து­ரை­யின் உடனடி தாக்­கம்

இன்­னும் தெரியவில்லை.