இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: ஆண் நடன பயிற்றுவிப்பாளர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள்

ஆண் நட­னப் பயிற்­று­விப்­பா­ளர் ஒரு­வர், வெவ்­வேறு தொடக்­க­நி­லைப் பள்­ளி­க­ளைச் சேர்ந்த பத்து வய­துச் சிறு­வர்­கள் இரு­வ­ருக்கு பாலி­யல் ரீதி­யா­கத் தொந்­த­ரவு கொடுத்­த­தாக சிங்­கப்­பூ­ர­ரான 41 வயது ஆட­வர், ஐந்து பாலி­யல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

2016 ஆம் ஆண்டு ஒரு சிறு­வ­னுக்கு இரண்டு முறை­யும் 2019ல் இருந்து 2020ஆம் ஆண்­டு­வரை இன்­னொரு சிறு­வ­னுக்கு மூன்று முறை­யும் அந்த ஆட­வர், பாலி­யல் ரீதி­யாக தொந்­த­ரவு கொடுத்­துள்­ளார். கடந்த ஆண்டு பிப்­ர­வரி 3ஆம் தேதி, அந்த ஆட­வர் இன்­னொரு சிறு­வ­னி­டம் பள்­ளிப் பேருந்­தில் தகாத முறை­யில் நடந்­து­கொள்ள முயற்சி செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து, அந்த ஆட­வர், பள்­ளி­களில் இனி நட­னப் பயிற்சி வகுப்­பு­களை நடத்­து­வ­தற்­கான அனு­ம­தியை கல்வி அமைச்சு ரத்து செய்­து­விட்­டது.

"மாண­வர்­க­ளுக்­குப் பாது­காப்­பான கற்­றல் சூழ்­நி­லையை வழங்க கல்வி அமைச்சு கடப்­பாடு கொண்­டுள்­ளது. மாண­வர்­க­ளின் பாது­காப்­புக்கும் உடல்­ந­லத்­திற்­கும் கேடு­விளை­விக்­கும் செயல்­களில் ஈடு­ப­டு­வோர் மீது கடு­மை­யான நட­வடிக்கை எடுக்க அமைச்சு தயங்­காது," என்று அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். டிசம்­பர் 13ஆம் நடக்­க­வி­ருக்­கும் விசா­ர­ணை­யில், அந்த ஆட­வர், அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை ஒத்­துக்­கொள்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பதி­னான்கு வய­துக்­குக் கீழுள்ள குழந்­தை­க­ளுக்கு பாலி­யல் ரீதி­யாக தொந்­த­ரவு கொடுக்­கும் ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டுக்­கும் அதி­க­பட்­சம் ஐந்து ஆண்­டு­கள் சிறை, அப­ரா­தம் அல்­லது பிரம்­படி ஆகிய தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம். மாண­வர்­க­ளின் பாது­காப்பு கருதி, பள்­ளி­க­ளின் பெயர்­களும் குற்­றம் சாட்­டப்­பட்ட அந்த ஆட­வ­ரின் பெய­ரும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!