ஸ்காட்ஸ் ஸ்குவேர் கொண்டோமினியத்தில் கட்டட மேலாளராகப் பணிபுரிந்த ஒருவர், அந்தக் குடியிருப்புக் கட்டடங்களில் உள்ள வீடுகளில் கள்ளத்தனமாகப் புகுந்து திருடிய குற்றத்திற்காக அவருக்கு 18 மாதம் கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டே ஜியாஹெ என்ற அந்த 37 வயது ஆடவர், மோசமான மனச்சோர்வு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனால் அவருக்கு சிறைத் தண்டனைக்குப் பதிலாக கட்டாய சிகிச்சை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மூன்று வீடுகளில் கள்ளத்தனமாகப் புகுந்து திருடியதை அவர் ஒத்துக்கொண்டார். மேலும் அவர் மீதான இரண்டு வீடுகளுடன் தொடர்புடைய திருட்டுக் குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது. சிங்கப்பூரரான டே, $28,000 ரொக்கமும் $86,000 மதிப்புள்ள விலையுயர்ந்த ஹெர்மிஸ் கைப்பைகளையும் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த ஆடவர், $2,000 மதிப்புள்ள ஒரு ஜோடி காலணி மற்றும் புத்தகங்கள் போன்றவற்றையும் திருடியுள்ளார்.
இந்தத் திருட்டுச் சம்பவங்களை கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாகக் கூறப்படுகிறது.


