தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாற்றங்களுடன் 2022ல் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி

1 mins read
c4af67c1-5eab-486c-8e4e-a53cb90ebed9
-

சிங்­கப்­பூர் விமா­னக் கண்­காட்சி அடுத்த ஆண்டு பிப்­ர­வரியில் நடை­பெ­றும். இருப்­பி­னும், பொது­மக்­கள் வரு­கைக்­கென இம்­முறை நாட்­கள் ஒதுக்­கப்­ப­டாது என்­றும் நான்கு நாட்­க­ளுக்கு மட்­டுமே நிகழ்ச்சி நடை­பெ­றும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஈராண்­டுக்கு ஒரு­முறை நடை­பெ­றும் இக்­கண்­காட்சி, சாங்கி கண்­காட்சி மையத்­தில் பிப்­ர­வரி 15ஆம் தேதி­யன்று தொடங்­கும் என்று கூறப்­பட்­டது. முன்­ன­தாக, பல நாடுகளைச் சேர்ந்த ஆகா­யப் படை­க­ளின் வான் சாக­சங்­க­ளைப் பார்ப்­ப­தற்­காக வார இறுதியில் பொது­மக்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். கொவிட்-19 தொற்­று பர­வும் அபா­யத்­தைக் குறைக்க பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் அமல்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. 10,000க்கும் மேற்­பட்­டோர் வருகை அளிப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.