சிங்கப்பூரிலிருந்து டென்மார்க் செல்வோருக்குக் கட்டுப்பாடு

2 mins read
860c86c8-8f3a-423b-9b74-b5f4ffa50d62
-

டென்­மார்க் செல்­லக்­கூ­டிய சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இரு­

த­ரப்­பி­லும் தடை­காப்பு கட்­டுப்­பாடு இல்­லாத பய­ணத்தை இனி அனு­ப­விக்க இய­லாது. கொவிட்-19 தொற்­றக்­கூ­டிய அதிக ஆபத்­துள்ள நாடு என்று சிங்­கப்­பூரை டென்­மார்க் வகைப்­ப­டுத்தி இருப்­பதே அதற்­குக் கார­ணம்.

இவ்­வாறு அறி­விக்­கப்­பட்டு இருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரில் இருந்து செல்­லக்­கூ­டிய பய­ணி­கள் டென்­மார்க் சென்று சேர்ந்­த­தும் பத்து நாட்­கள் தனி­மை­யில் இருக்­கக்­கூ­டிய தடை­காப்பு உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

டென்­மார்க் தூத­ர­கம் இதனை நேற்று தனது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்து இருந்­தது. தடை­காப்­புக் காலம் குறை­வ­தற்­கும் வாய்ப்பு உண்டு. டென்­மார்க்­கிற்­குள் நுழைந்த நான்­காம் நாளில் எடுக்­கப்­படும் கொவிட்-19 பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்று உறு­தி­யா­னால் பத்து நாளுக்­குக் குறை­வா­கக் கட்­டுப்­பாடு இருக்­கும்.

சிங்­கப்­பூர் கடந்த இரு மாதங்­

க­ளாக சில ஐரோப்­பிய நாடு­க­ளு­டன் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளுக்­கான தடை­யற்ற சிறப்­புப் பயண (விடி­எல்) ஏற்­பாட்­டைச் செய்து வரு­கிறது. டென்­மார்க், இத்­தாலி, பிரான்ஸ், ஜெர்­மனி, ஸ்பெ­யின், சுவிட்­சர்­லாந்து, நெதர்­லாந்து, சுவீ­டன், பின்­லாந்து மற்­றும் பிரிட்­டன் ஆகி­யன அந்த ஐரோப்­பிய நாடு­கள்.

இந்த ஏற்­பாட்டை சிங்­கப்­பூர் தன்­னிச்­சை­யா­கச் செய்­து­கொண்டு உள்­ளது. இந்த நாடு­களில் இருந்து வரு­வோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டி­ருந்­தால் தடை­காப்­புக் கட்­டுப்­பாடு எது­வும் இன்றி சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­ய­லாம். சிங்­கப்­பூர் முடி­வெ­டுப்­ப­தற்கு முன்­னரே இந்த பத்து ஐரோப்­பிய நாடு­களும் சிங்­கப்­பூ­ரில் இருந்து வரு­வோ­ருக்­குக் கட்­டுப்­பா­டு­களை விலக்கி இருந்­தது.

அதன் மூலம் சிங்­கப்­பூ­ருக்­கும் சிறப்­புப் பயண ஏற்­பாட்­டில் இடம்­பெற்றிருக்கும் ஐரோப்­பிய நாடு­

க­ளுக்­கும் இடையே செல்­லக்

­கூ­டி­ய­வர்­கள் இரு நாட்­டி­லும் தடை­யற்ற பய­ணத்தை அனு­ப­விக்­கும் நிலை உரு­வா­னது. ஆயி­னும், தற்­போது டென்­மார்க் பய­ணத்­திற்­குத் தடை விதிக்­கப்­பட்டுள்­ளது.