எட்டு நாட்களாகக் கட்டுக்குள் இருக்கும் தொற்று விகிதம்: புதன்கிழமை பாதிக்கப்பட்டோர் 3,481; உயிரிழந்தோர் 17

புதன்­கி­ழமை இரவு (நவம்பர் 10) நில­வ­ரப்­படி அன்­றைய தினம் 3,481 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­களில் 3,244 பேர் சமூக அள­வி­லும் 229 பேர் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்.

எஞ்­சிய 8 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்த பய­ணி­கள். சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 506 பேர் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள்.

3,481 என்­பது செவ்­வாய்க்­

கி­ழமை பதிவான எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் சற்று அதி­கம்.

செவ்­வாய்க்­கி­ழமை இரவு 3,397 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அன்­றைய தினம் கணக்­கி­டப்­பட்ட வாராந்­திர கொவிட்-19 தொற்று வளர்ச்சி விகி­தம் 0.82 என்­ப­தி­லி­ருந்து 0.88க்கு அதி­

க­ரித்­த­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

ஒவ்­வொரு வார­மும் சமூக அள­வில் பதி­வா­கும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதற்கு முந்­திய வாரத்­து­டன் ஒப்­பிட்டு வளர்ச்சி விகி­தம் கணக்­கி­டப்­ப­டு­கிறது.

இந்த விகி­தம் 1க்கு மேல் இருந்­தால் வாராந்­திர கொவிட்-19 தொற்று இன்­னும் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது எனப் பொருள்­படும். ஆனால் கடந்த எட்டு நாட்­க­ளாக தொற்று வளர்ச்சி விகி­தம் 1க்குக் கீழ் பதி­வாகி வரு­கிறது.

தொற்று கார­ண­மாக புதன்­

கி­ழமை 17 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் அமைச்சு தனது அன்­றாட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

இவர்­கள் 65 வய­துக்­கும் 101 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்­றும் கொவிட்-19 தொடர்­பான இதர உடல்­ந­லக் குறை­பா­டு­கள் கார­ண­மாக இவர்­கள் மர­ண­

ம­டைந்­த­தா­க­வும் அது கூறி­யது.

இவர்­க­ளை­யும் சேர்த்து இங்கு கொவிட்-19 தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 540க்கு அதி­க­ரித்து­ விட்­டது. அதே­போல இங்கு இது­வரை பதி­வான தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 227,681 ஆக உள்­ளது.

நவம்பர் 9ஆம் தேதி நில­வ­ரப்­படி, சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் 85 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

86 விழுக்­காட்­டி­னர் குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். 19 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) போட்­டுக்­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!